எமிரேட்ஸ் விமான நிறுவனம், சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையில் சேவை வழங்கும் விமானங்களில் புதிதாக பிரீமியம் இக்கானமி வகுப்பு இருக்கைகளை அமைத்துள்ளது.
ஜூன் மாதம் அத்தகைய விமானங்கள் சேவை வழங்கத் தொடங்கின.
ஏ380 ரக விமானங்கள் ஒவ்வொன்றிலும் 56 பிரீமியம் இக்கானமி வகுப்பு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கான கட்டணம் $1,729 முதல் தொடங்கும். ஒப்புநோக்க, இக்கானமி வகுப்பு இருக்கைக்கு $699 கட்டணம் செலுத்த வேண்டும். பிசினஸ் வகுப்பு இருக்கைக்கு $3,009 கட்டணம் செலுத்த வேண்டும்.
இப்போதைக்கு அடிக்கடி விமானப் பயணம் செய்வோருக்கு வழங்கப்படும் புள்ளிகளைப் பயன்படுத்தி இக்கானமி வகுப்பு இருக்கையை பிரீமியம் இக்கானமி வகுப்பு இருக்கையாக மேம்படுத்த இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து சிங்கப்பூர், நியூயார்க், கிரைஸ்ட்சர்ச் உள்ளிட்ட எட்டு நகரங்களுக்கு எமிரேட்ஸ் நிறுவனம் பிரீமியம் இக்கானமி வகுப்பு இருக்கைகளுடன் கூடிய விமானச் சேவைகளை வழங்குகிறது.