ரேசர் நிறுவனத்தில் திருடப்பட்டதரவுகள் யுஎஸ்$100,000க்கு விற்பனை

1 mins read
882cca59-8c6d-407e-b701-aa89a736b890
ரேசர் நிறுவனத்தின் தரவுகள் விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. Byline: Hacker’s forum - படம்: ஹேக்கர்ஸ் ஃபாரம்

‘ரேசர்’ நிறுவனத்தின் கணினி கட்டமைப்புக்குள் நுழைந்த ஊடுருவல்காரன் அதன் முழுத் தரவுகளை திருடி விற்பனைக்கு வெளியிட்டுள்ளது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இதனால் கணினி விளையாட்டு நிறுவனமான ‘ரேசர்’ கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது.

நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ஊடுருவல் பற்றி அறிந்திருப்பதாகவும் விசாரணை நடத்தி வருவதாகவும் ரேசர் தெரிவித்துள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இது பற்றி ஆராய்ந்ததில் ரேசர் இணையத்தளம், அதன் பொருள்களை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் உள்ளே நுழையும் விவரங்கள், பின்னணியில் இயங்கும் மென்பொருள் இயங்குதளம் உட்பட விற்கப்படுவதை கண்டுபிடித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரேசரின் மின்னிலக்க ரொக்கப் பையும் திருடப்பட்டுள்ளது.

ஊடுருவல்காரன் திருடப்பட்ட தரவுகளில் சில மாதிரிகளை வெளியிட்டுள்ளான். அதில், சில வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற 404,000 வாடிக்கையாளர்களின் விவரங்கள் தம்மிடம் இருப்பதாக அவன் தெரிவித்துள்ளான்.

ஊடுருவல் கருத்தரங்கு தளத்தில் மொத்த தரவுகளையும் ஒரே ஒரு வாடிக்கையாளருக்கு மட்டும் 100,000 யுஎஸ் டாலருக்கு விற்கப்படும் என்று அவன் அறிவித்துள்ளான். மேனிரோ மின்னிலக்க நாணயத்தின் மூலம் பணத்தை வழங்க வேண்டும் என்றும் அவன் கூறியுள்ளான்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்