தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடியிருப்புப் பேட்டை தேசிய தினக் கொண்டாட்ட நுழைவுச்சீட்டுகளைப் பெற...

1 mins read
3133ec5b-3cbe-4bbf-824a-e5e8c3c34302
குடியிருப்புப் பேட்டைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க நுழைவுச்சீட்டுகளை வரும் சனிக்கிழமையிலிருந்து பெறலாம்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

இவ்வாண்டு சிங்கப்பூரின் 58வது பிறந்தநாளை முன்னிட்டு ‘கெட் ஆக்டிவ்! சிங்கப்பூர் ஹார்ட்லேண்ட் செலிபிரேஷன்’ என்ற தலைப்பில் குடியிருப்புப் பேட்டைகளில் நடைபெறும் தேசிய நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் ஜூலை 15ஆம் தேதி நண்பகல் 12 மணியிலிருந்து மின்நுழைவுச்சீட்டுகளைப் பெற விண்ணப்பிக்கலாம். 

உட்லண்ட்ஸ், ஜுரோங் வெஸ்ட், தோ பாயோ, பிடோக் ஆகிய குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு மையங்களில் அடுத்த மாதம் 5ஆம், 6ஆம் தேதிகளில் இந்த விழா நடைபெறும். 

‘அவர் தெம்பனிஸ் ஹப்’பில் இந்த விழா ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று மட்டும் நடைபெறும். 

www.ndp.gov.sg/ticketing/heartland-festivals/ என்ற இணையப்பக்கத்தில் இந்நுழைவுச்சீட்டுகளைப் பெறலாம். 

விண்ணப்பத்தை அனுப்பிய சில நாள்களில் மின்நுழைவுச்சீட்டுகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். 

நுழைவுச்சீட்டுகளை நேரடியாகப் பெற விரும்புவோர் ஜூலை 15ஆம் தேதியிலிருந்து தீவிலுள்ள சாஃப்ரா நிலையங்களை நாடலாம். 

மேல் விவரங்களுக்கு www.ndp.gov.sg இணையப்பக்கத்தை நாடுங்கள். 

சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் ஒருமுறை மட்டுமே நுழைவுச்சீட்டுகளைப் பெறலாம். ஒவ்வொருவரும் இரண்டு அல்லது நான்கு நூழைவுச்சீட்டுகளை மட்டும் பெறலாம்.  

ஒவ்வொரு நுழைவுச்சீட்டுக்கும் ஒருவருக்கே அனுமதி. 16 வயதிற்கும் குறைந்த வயதுடையவர்கள் பெற்றோருடன் செல்ல வேண்டும். 

இந்த ஆண்டு குடியிருப்புப் பேட்டைகளில் நடைபெறும் கொண்டாட்டத்தில் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் மக்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்தவும் அனைத்து வயதினருக்கும் ஏற்புடைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்