ஜூரோங் லேக் வட்டாரத்தில் கூடுதல் பசுமைமிக்க உள்கட்டமைப்பை உருவாக்க விருது வென்ற எட்டுத் திட்டங்களைப் பயன்படுத்தி முன்னோட்டத் திட்டம் நடத்தப்படுகிறது.
கடந்த பிப்ரவரிமாதம் 24ஆம் தேதியிலிருந்து மே மாதம் 5ஆம் தேதி வரை ஜூரோங் லேக் வட்டார புத்தாக்கச் சவால் நடைபெற்றது. அதில் எட்டு புத்தாக்கத் திட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
யுஆர்ஏ மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருது வென்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
போட்டிக்கு நகர மறுசீரமைப்பு ஆணையம், அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்க அலுவலகம், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆகியவை ஏற்பாடு செய்தன.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, மத்திய வர்த்தக வட்டாரத்துக்கு வெளியே சிங்கப்பூரின் ஆகப் பெரிய வர்த்தக வட்டாரமாக ஜூரோங் லேக் வட்டாரம் திகழும் என்று கூறினார்.

