புக்கிட் பாஞ்சாங்கில் திங்கட்கிழமை இரவு பாதசாரி ஒருவர்மீது கார் மோதியது.
சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த 70 வயது மாது பின்னர் மாண்டதாகக் கூறப்பட்டது.
புக்கிட் பாஞ்சாங் ரிங் ரோட்டிற்கும் ஜெலுபு ரோட்டிற்கும் இடையில் நடந்த சம்பவம் குறித்து திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
41 வயதாகும் கார் ஓட்டுநர் விசாரணையில் உதவிவருவதாக அது குறிப்பிட்டது.
மாது போக்குவரத்துச் சமிக்ஞை விளக்கில் இருந்து சில மீட்டர் தொலைவில் சாலையைக் கடந்தபோது கார் அவரை நோக்கிச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஸ்டோம்ப் இணையச் செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

