சிங்கப்பூரில் தலைமையகம்; 400 ஊழியர்களைப் பணியமர்த்த திட்டம்

1 mins read
e106ff73-ced0-4d23-8aa3-3d4e59a6ffe1
சிங்கப்பூர் நிறுவனங்களில் வேலை செய்யும், 25க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கி வருவதாக டீல் நிறுவனம் தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரை மையமாகக் கொண்ட உலகளாவிய மனிதவள நிறுவனமான ‘டீல்’, அதன் ஆசிய பசிபிக் தலைமையகத்தைச் சிங்கப்பூரில் திறக்க திட்டமிட்டுள்ளது.

அத்துடன் அடுத்த நான்கு ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணியமர்த்துவதே அதன் இலக்கு.

வேலையிடத்துக்குச் செல்லும் தேவையின்றி வீட்டிலிருந்து வேலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு, சிங்கப்பூர் நிறுவனங்கள் அவற்றின் வர்த்தகத்தை வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்வது, சிங்கப்பூரில் உள்ள திறனாளர்களுக்கு உலகளாவிய நிலையில் இருக்கும் நன்மதிப்பு ஆகியவை காரணமாக பொருளியல் மேம்பாட்டுக் கழகத்துடன் ஒன்றிணைந்து சிங்கப்பூரில் அதன் ஆசிய பசிபிக் தலைமையகத்தைத் திறக்க டீல் திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூர் நிறுவனங்களில் வேலை செய்யும், 25க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஆதரவு அளித்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் டீல் நிறுவனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்