கம்கேர் நிதியுதவிக்கு மேலும் பல குடும்பங்கள் தகுதி பெறும்

சிங்கப்பூரில் மேலும் பல குறைந்த வருமானக் குடும்பங்கள் கம்கேர் நிதி உதவித் திட்டத்திற்குத் தகுதிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கம்கேர் என்பது தேவையுள்ள குடும்பங்களுக்கான அரசாங்கத்தின் அடிப்படை நிதியுதவித் திட்டமாகும்.

அந்தத் திட்டத்திற்குத் தகுதி பெறுவதற்கான வருமான வரம்பு ஜூலை 17ஆம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது.

மாதம் ஒன்றுக்கு $800 அல்லது அதற்கும் குறைந்த குடும்ப தனிநபர் வருமானம் கொண்ட விண்ணப்பதாரர்கள் அந்தத் திட்டத்திற்குத் தகுதி பெறுகிறார்கள்.

இப்போதைய இந்த வருவாய் வரம்பு $650 அல்லது அதற்கும் குறைவானதாக இருக்கிறது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வியாழக்கிழமை இந்த விவரங்களைத் தெரிவித்தது.

கம்கேர் வருமான வரம்பு இதற்கு முன் 2014ல் உயர்த்தப்பட்டது. மாதம் $550 அல்லது அதற்கும் குறைவாக இருந்த அந்த வரம்புத் தொகை $650 அல்லது அதற்கும் குறைவான நிலைக்கு உயர்த்தப்பட்டது.

கம்கேர் வருமான வரம்புத் தொகையை இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தான் மறுபரிசீலனை செய்வதாக அமைச்சு தெரிவித்தது.

இந்த அமைச்சு, 2022 ஆகஸ்ட்டில் கம்கேர் ஏற்பாட்டின் குறுகிய, நடுத்தர கால உதவித்திட்டம், நீண்டகால உதவித்திட்டம் ஆகிய இரண்டு முக்கிய திட்டங்களின் பேரில் பயனடைவோருக்குக் கிடைக்கக்கூடிய ரொக்கத் தொகையைக் கூட்டியது.

நீண்டகால உதவித்திட்டம் மூலம் இப்போது ஒரு நபர் குடும்பத்திற்கு மாதம் $640 கிடைக்கிறது. இது முன்பு $600 ஆக இருந்தது.

தற்காலிகமாக வேலை இன்றி இருக்கின்ற அல்லது குறைந்த வருவாய் பெறுகின்ற, உதவித் தேவைப்படுகின்ற மக்களுக்கு குறுகிய, நடுத்தரகால உதவித்திட்டம் மூலம் தற்காலிக நிதி உதவி கிடைக்கிறது.

குடும்ப தனிநபர் வருமான வரம்பு என்பது, ஒரு குடும்பம், உதவி பெறுவதற்குத் தகுதி பெறக்கூடிய குத்துமதிப்பான வருமான அளவைக் குறிப்பதாகும்.

இதன் மூலம் தானாகவே யாரும் குறுகிய, நடுத்தரகால உதவித்திட்டத்திற்குத் தகுதிபெற இயலாது என்பதை அமைச்சு விளக்கியது.

குறுகிய, நடுத்தரகால உதவித் திட்டத்திற்குத் தகுதி பெற சமூக சேவை அலுவலகங்களின் முழுமையான மதிப்பீட்டு முறை அடிப்படை அம்சமாக இருக்கும்.

அடிப்படை தேவைகள் நிறைவேற தேவையான அளவுக்கு வருவாய் இல்லாதோரும் இத்திட்டத்திற்குத் தகுதி பெறலாம்.

கம்கேர் ஆண்டு அறிக்கை, ஆகக்கடைசியாக 2022 அக்டோபரில் வெளியிடப்பட்டது.

அதன்படி, 2022 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டில் கம்கேர் திட்டங்கள் மூலம் 91,105 பேர் உதவி பெற்றனர். அவர்களுக்கு $177 மில்லியன் கொடுக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!