$1.5 மி. கடனைத் திருப்பித் தர ‘கிட்சன் கல்ச்சர்’ நிறுவனத்துக்கு வலியுறுத்து

$1.5 மி. கடனைத் திருப்பித் தர ‘கிட்சன் கல்ச்சர்’ நிறுவனத்துக்கு வலியுறுத்து

1 mins read
788e0164-b198-4940-8b2c-332e4cc41768
பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ‘கிச்சன் கல்ச்சர்’. - படம்: கிச்சன் கல்ச்சர்

‘கிச்சன் கல்ச்சர்’ சமையலறை வடிவமைப்பு நிறுவனம் தான் பெற்ற $1.5 மில்லியன் கடனைத் திருப்பித் தரவேண்டும் என வலியுறுத்தி, தனியார் முதலீட்டாளர் டான் ஜின் டாட்டின் வழக்கறிஞர்கள் அந்நிறுவனத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

‘கிச்சன் கல்ச்சர்’ ஏற்கெனவே பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.

அண்மையில் அந்நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. திரு டானின் அனுமதியின்றி அந்த மாற்றங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்நிலை ஏற்பட்டு உள்ளது.

திரு டான், கிச்சன் கல்ச்சரின் நிர்வாக இயக்குநரான லிம் வீ லீக்குத் தெரிந்தவர். 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரு டான், கிச்சன் கல்ச்சருக்கு ஒரு மில்லியன் வெள்ளியைக் கடனாக வழங்க ஒப்பந்தம் செய்துகொண்டார். அதற்குப் பிறகு அந்நிறுவனத்துக்கு மேலும் 500,000 வெள்ளியைக் கடனாக வழங்கவும் டிசம்பர் மாதம் அவர் இணங்கினார்.

குறிப்புச் சொற்கள்