ஜூலை 22, 29 தேதிகளில் நடைபெறவிருக்கும் தேசிய தின முன்னோட்ட நிகழ்ச்சிகளால் 39 பேருந்துச் சேவைகள் பாதிப்படைகின்றன.
பேருந்துச் சேவைகள் 36, 61, 75, 77, 97, 106, 167, 518, 857, 960, 960e, 961 ஆகியவை முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் நாள்களிலும் ஆகஸ்ட் 9ஆம் தேதியும் பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் நிற்கமாட்டா என்று பேருந்து நிறுவனங்கள் தெரிவித்தன. எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாள்களிலும் மட்டுமே நடத்தும் 961M சேவை தேசிய நாளன்று பாதிப்படையும்.
எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் 27 பேருந்துச் சேவைகள், நிக்கல் ஹைவே, மரினா பே, குடிமை வட்டாரம் ஆகிய பகுதிகளில் உள்ள சில பேருந்து நிறுத்தங்களைத் தவிர்த்திடும்.
அவை 10, 14, 16/16M, 32, 51, 56, 57, 63, 70/70M, 80, 100, 107/107M, 111, 124, 130, 131, 133, 145, 162/162M, 166, 174, 195, 196, 197, 502, 851, 851e. சில பேருந்து நிறுத்தங்கள் நாள் முழுவதும் தவிர்க்கப்படும், மற்றவை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் தவிர்க்கப்படும். இதுதவிர, பேருந்துச் சேவைகளின் பயணப்பாதையில் மாற்றம் இருக்காது. மேல்விவரம் அறிய பொதுமக்கள் 1800-225-5663 என்ற எண்ணில் டிரான்சிட்லிங்குடன் தொடர்பு கொள்ளலாம்.