தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்பப்பட்ட இளையர்

1 mins read
df515b7e-e151-4060-bbfe-936eb97a0e7e
இளையரை கடுமையான சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளையரை சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது 17 வயதாகும் அவர் கடுமையானக் கட்டுப்பாடுகள் உள்ள நிலையத்தில் தடுத்து வைக்கப்படுவார். அங்கு நேரத்திற்கு உடற்பயிற்சி மற்றும் ஆலோசனைகளுக்கு அவர் உட்படுத்தப்படுவார்.

நன்னடத்தைக் கண்காணிப்பைவிட சீர்திருத்தப் பயிற்சி கடுமையான தண்டனை என்று ‘எஸ்ஜி கோர்ட்ஸ்’ இணையப்பக்கம் தெரிவிக்கிறது.

ஒருவர், மீண்டும் அந்தக் குற்றத்தை செய்யாத அளவுக்கு சீர்திருத்தப் பயிற்சி இருக்கும்

கடந்த மே மாதம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதை இளையர் ஒப்புக் கொண்டார். பாதிக்கப்பட்டவருக்கு பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதால் இளையரின் பெயரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பெற்றோர், மூத்த சகோதரர், பாட்டி வசிக்கும் வீட்டில் சகோதரியிடம் இரண்டு முறை இளையர் முறை தவறி நடக்க முயற்சி செய்துள்ளார்.

2020 ஜூன் மாதத்தில் அவருக்கு 14 வயதாகும்போது படுக்கை அறையில் சகோதரியுடன் வன்புணர்வில் ஈடுபட முயற்சி செய்தார். அப்போது சகோதரிக்கு அவரை எதிர்க்கக்கூட தெரியவில்லை. 2022 பிப்ரவரி 5க்கும் ஜூலை 27க்கும் இடையே ஒரு நாள் தனது நண்பரிடம் சகோதரியிடம் வன்புணர்வில் ஈடுபட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆசிரியரிடம் நண்பர் தெரிவித்ததால் இளையரின் செயல் வெளியே தெரிய வந்தது. பள்ளி முதல்வர் பெற்றோரைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து தந்தை காவல்துறையிடம் புகார் அளித்தார்.

குறிப்புச் சொற்கள்