எக்ஸ்பிரைஸ் உலக இறுதிப் போட்டியில் மோதும் ஆறு குழுக்கள்

எக்ஸ்பிரைஸ் உலக இறுதிப் போட்டியில் மோதும் ஆறு குழுக்கள்

2 mins read
bfe704f1-61a0-4cef-a494-223d7178e52c
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இடிஹெச் பயோடைவ்எக்ஸ் என்ற இந்தக் குழுவினர் மத்திய நீர்த்தேக்க வட்டார வனப்பகுதியில் ஆளில்லா வானூர்தி, இயந்திர மனித வாகனம் மூலம் பரிசோதனைகளை நடத்தினர். - படம்: XPrize

‘எக்ஸ்பிரைஸ் (XPrize) ஊசியிலைக் காடு’ என்ற US$10 மில்லியன் உலகளாவிய போட்டி ஒன்று இப்போது நடந்து வருகிறது.

அந்தப் போட்டி அரையிறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மே மாதம் முதல் ஜூன் மாதத் தொடக்கம் வரை உலகம் முழுவதையும் சேர்ந்த 13 குழுக்கள் சிங்கப்பூரில் தங்களுடைய தொழில்நுட்பங்களைப் பரிசோதித்து பார்த்து இருக்கின்றன.

ஆகக் கடைசியாக ‘இடிஹெச் சூரிக்’ என்ற சுவிட்சர்லாந்து பல்கலைக்கழக குழு ஒன்று சிங்கப்பூருக்கு வந்திருந்தது.

இடிஹெச் பயோடைவ்எக்ஸ் (ETH BiodivX) என்ற பெயரைக் கொண்ட அந்தக் குழுவினர் சிங்கப்பூரின் மத்திய நீர்த்தேக்க வனப் பகுதியில் ஐந்து ஆளில்லா வானூர்திகளைச் செயலில் இறக்கினர்.

அவை காற்றின் தரத்தைக் கண்டுபிடித்தன. காட்டு மரங்களில் இருந்து மூலக்கூறு தன்மைகளைச் சேகரித்தன. தண்ணீரையும் அவை பரிசோதித்தன.

ஆளில்லா வானூர்திகள் அந்தப் பணிகளைச் செய்துகொண்டிருந்த அதே வேளையில், தரையில் இயந்திர மனித வண்டி ஒன்று அங்குமிங்கும் ஓடி காட்டு விலங்குகளையும் தாவரங்களையும் படம் எடுத்தது.

தாவரங்களில் இருந்து அது டிஎன்ஏ மூலக்கூறுகளைச் சேகரித்தது.

உலகில் ஊசியிலைக்காட்டு வளங்கள் அழிந்து வருகின்றன. அது பற்றி அறிவியல் அறிஞர்கள் ஆய்வுகளை நடத்தும் விதத்தை தானியக்கமயமாக்கக்கூடிய கண்கூடான தொழில்நுட்பத் தீர்வுகளை அடையாளம் காண்பது உலகளவில் இடம்பெறும் அந்தப் போட்டியின் இலக்காக இருக்கிறது.

உலகில் மூன்று ஊசியிலைக்காட்டுப் பகுதிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று அமேசான் காட்டுப் பகுதி. அது 6.7 மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இந்தியா போன்று இரண்டு மடங்கு பரப்பளவில் அமேசான் காட்டுவளம் அமைந்து இருக்கிறது.

இரண்டாவது காங்கோ காட்டுவளம். மூன்றாவது தென்கிழக்கு ஆசியா.

ஊசியிலைக் காடுகள் பருவநிலையைப் பொறுத்தவரை மிக முக்கிய பணியாற்றுகின்றன.

நிலநடுக் கோட்டுப் பகுதியில் அமைந்து இருக்கும் மரங்கள் கரிமக்கழிவான கரியமில வாயுவை ஆண்டு முழுவதும் கிரகித்துக்கொண்டு ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கின்றன.

ஊசியிலைக் காடுகளில் பலதரப்பட்ட அரிய வனவிலங்குகளும் வாழ்கின்றன. மானிட சமூகங்கள் பலவற்றுக்கும் அவை இடம் கொடுக்கின்றன.

எக்ஸ்பிரைஸ் (XPrize) ஊசியிலைக் காடு உலகப் போட்டியின் அரையிறுதியில் ஆறு குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும். அந்த ஆறு குழுக்களில் இடிஹெச் பயோடைவ்எக்ஸ் சுவிட்சர்லாந்து குழுவும் ஒன்று.

அடுத்த ஆண்டு இறுதிப்போட்டி நடக்கிறது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்