மேம்பாட்டுப் பணிகளுக்காக ஆகஸ்ட் மாதம் இரு வாரயிறுதிகளில் புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் நிலையத்தில் ரயில் சேவை ஒரு மணி நேரத்திற்கு முன்னரே நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை நிலப் போக்குவரத்து ஆணையமும் நடவடிக்கை கட்டுப்பாட்டு மையமும் திங்கட்கிழமை வெளியிட்டன.
ஆகஸ்ட் 12, 13, 19, 20 ஆகிய தேதிகளில் புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை இரவு 10:30 மணியுடன் நிறுத்தப்படும்.
அதன் பின்னர், அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முழுவதும் புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் நிலையத்தில் சேவை இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.
1999ஆம் ஆண்டு முதல் செயல்படும் புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவைத்தடம், சிங்கப்பூரின் ஆகப் பழைய தடங்களில் ஒன்று.
சமிக்ஞைகளைக் கண்காணிப்பது, மின்விநியோகம், தொடர்பு, தகவல் கட்டமைப்பு போன்றவற்றை நடவடிக்கைக் கட்டுப்பாட்டு மையம் மேற்பார்வையிட்டு வருகிறது.
பயணிகளுக்கு இடையூறு இல்லாத சேவையை வழங்க மேம்பாட்டுப் பணிகள் இடம்பெறுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.