தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துவாஸ் கட்டுமானத்தள விபத்தில் ஊழியர் மரணம்

1 mins read
b8ab6fea-e540-466a-9125-bf6f7b49e8a3
கோப்புப்படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

துவாஸ் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட வேலையிட விபத்தில் ஊழியர் ஒருவர் மாண்டார். அவர் வெளிநாட்டு ஊழியராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சனிக்கிழமை காலை 9 மணிவாக்கில் கட்டுமானத் தளத்தில் ஊழியர் ஒருவர் நினைவிழந்த நிலையில் காணப்பட்டதாகக் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது. 

அதன் பின்னர் அந்த ஊழியருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. 

அதைத்தொடர்ந்து, ஊழியரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், அந்த ஊழியர் சனிக்கிழமை மாலை உயிரிழந்துவிட்டார்.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஊழியரின் குடும்பத்தினர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருவதாகவும் கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியது. 

மாண்ட ஆடவர் பெண்டா ஓசன்- ஹியூண்டாய்-போஸ்கலிஸ் கூட்டு நிறுவனத்தின் ஊழியர் என்று தெரிவிக்கப்பட்டது. 

இவ்வாண்டில் மட்டும் இதுவரை 17 பேர் வேலையிட விபத்துகளில் மாண்டுவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்