சிங்கப்பூரில் எல்லாச் சமூகத்தினரும் தங்களது கலாசாரத்தைக் கட்டிக்காக்க வாய்ப்புண்டு என்து துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
சீக்கியர் ஆலோசனை மன்றத்தின் 75ஆவது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டபோது திரு வோங் இவ்வாறு கூறினார்.
சிங்கப்பூர் கல்சா சங்க வளாகத்தில் அவ்விழா நடந்தது.
இனம், சமயம் போன்றவற்றைக் கொண்டு மக்களிடையே எளிதாகப் பிரச்சினைகளையும் பிரிவுகளையும் ஏற்படுத்த முடியும். அதனால், சிங்கப்பூரில் தொடர்ந்து இன நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு சீக்கியர் ஆலோசனை மன்றம் எப்படி உதவியது என்பது குறித்த ஒரு புத்தகமும் விழாவின்போது வெளியிடப்பட்டது. மன்றத்திற்கான புதிய இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

