தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாங்கி விமான நிலையம் அருகே பறந்த மலேசிய ஹெலிகாப்டர்; எஃப்-16 போர் விமானங்கள் சீறிப் பறந்தன

1 mins read
69e6657a-5625-4448-a389-addba0d8de53
சாங்கி விமான நிலையம் அருகே கடலுக்கு உயரே மலேசிய ஹெலிகாப்டர் பறந்ததை அடுத்து சிங்கப்பூர் குடியரசு விமானப் படையின் எஃப்-16 ரக போர் விமானங்கள் சீறிப் பறந்தன. - படம்: சிங்கப்பூர் குடியரசு விமானப் படை/ஃபேஸ்புக் 

சாங்கி விமான நிலையத்திற்கு கிழக்கே சிங்கப்பூர் நீரிணைக்கு உயரே மலேசியாவில் பதியப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று புதன்கிழமை பிற்பகல் நேரத்தில் பறந்ததையடுத்து சிங்கப்பூர் குடியரசு விமானப் படையைச் சேர்ந்த இரண்டு எஃப்-16 ரக போர் விமானங்கள் சீறிப் பறந்தன.

அந்தப் போர் விமானங்கள் பிற்பகல் 12.40 மணிக்கு விரைந்ததாக தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூட்டறிக்கையில் தெரிவித்தன.

சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் இல்லை என்பது உறுதியாகத் தெரியவந்த பிறகு அந்தப் போர் விமானங்கள் தரையிறக்கப்பட்டதாக அறிக்கை தெரிவித்தது.

மேலே பறந்த ஹெலிகாப்டர் குடிமை வகையைச் சேர்ந்ததாகும். வெளிநாடு ஒன்றில் அது பதியப்பட்டு இருந்தது என்பது முதல் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்து இருக்கிறது.

இதன் விளைவாக சாங்கி விமான நிலையத்தில் பிற்பகல் 12.50 மணி முதல் 1.28 மணி வரை செயல்பாடுகள் தடைபட்டன. தரையிறங்க வந்த ஒன்பது விமானங்களும் புறப்பட்டுச் செல்லவிருந்த 11 விமானங்களும் தாமதம் அடைந்தன.

குறிப்புச் சொற்கள்