அதிக நாடுகளைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர், பயணப் பெட்டி கையாள்பவர்களுக்கு வொர்க் பர்மிட்

இந்தியா, இலங்கை நாடுகளிலிருந்து ‘வொர்க் பர்மிட்’ சமையல்காரர்களுக்கு விண்ணப்பிக்கலாம்

அதிக நாடுகளைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர், பயணப் பெட்டி கையாள்பவர்களுக்கு வொர்க் பர்மிட்

3 mins read
58e6bfb7-8462-460e-836c-e5bc70fb3d35
இந்தியா, இலங்கை, பங்ளாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்தும் சமையல்காரர்களை வேலைக்கு அமர்த்த செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம். - கோப்புப் படம்: இணையம்

சேவை, தயாரிப்புத் துறையைச் சேர்ந்த முதலாளிகளுக்கு வரப்பிரசாதமாக எழுவர் அடங்கிய வொர்க் பர்மிட் பட்டியலில் தூய்மைப் பணியாளர்களும் பயணப் பெட்டி கையாள்பவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனால் செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து அதிக நாடுகளிலிருந்து இத்தகைய ஊழியர்களை முதலாளிகள் வேலைக்கு அமர்த்த முடியும்.

இந்திய உணவகங்களில் பணியாற்றும் சமையல்காரர்கள், பத்திரி வேலை செய்வோர் வழக்கத்திலிருக்கும் தொழில்துறை சாரா வேலைப்பட்டியலில் (NTS) இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியல் 2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது வெளியிடப்பட்டது.

தூய்மைப் பணியாளர்களும் பயணப் பெட்டி கையாள்பவர்களும் கிடைக்காமல் ஹோட்டல்கள் திணறுகின்றன. இதனால் விருந்தோம்பல் துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டு சிறந்த சுற்றுலாவுக்கான சிங்கப்பூரின் பெருமைக்கும் இழுக்கு ஏற்படுகிறது என்று மனிதவள அமைச்சின் அறிக்கையில் சிங்கப்பூர் ஹோட்டல்கள் சங்க நிர்வாக இயக்குநர் மார்கரெட் ஹெங் தெரிவித்து இருந்தார்.

சிங்கப்பூர் பயணத் துறைக் கழகத்துடன் (எஸ்டிபி) ஆலோசனை நடத்திய பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டதாக அறிக்கை குறிப்பிட்டது.

இவ்வாண்டு ஜூலை 31 வரை சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7.7 மில்லியனைத் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.23 மில்லியன் பயணிகள் மட்டுமே வந்திருந்தனர்.

பொதுவாக சீனா, மலேசியா, ஹாங்காங், மக்காவ், தென்கொரியா, தைவான் ஆகிய இடங்களிலிருந்து வரும் வொர்க் பர்மிட் ஊழியர்களை மட்டுமே சேவை மற்றும் தயாரிப்புத் துறை முதலாளிகள் வேலைக்கு அமர்த்த முடியும்.

செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து ‘என்டிஎஸ்’ நாடுகள் என்று அழைக்கப்படும் பங்ளாதேஷ், இந்தியா, மியன்மார், பிலிப்பீன்ஸ், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வொர்க் பர்மிட் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

இருந்தாலும் இத்தகைய ஊழியர்களுக்கு மாதச் சம்பளமாக குறைந்தது 2,000 வெள்ளியை முதலாளிகள் வழங்க வேண்டும். எம்ப்ளாய்மெண்ட் பாஸ் தவிர நிறுவனத்தில் வேலை செய்யும் மொத்த ஊழியர்களில் இவர்களின் பங்கு எட்டு விழுக்காடாக இருக்க வேண்டும்.

ஒன்பது வேலைகளில் ‘என்டிஎஸ்’ நாடுகளிலிருந்து வரும் உடலுழைப்பு ஊழியர்களை தற்போது ‘எஸ்பாஸ்’ல் பணியமர்த்த முடியும். ‘எஸ் பாஸ்’ தகுதி வரம்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சியாக இது இடம்பெறுகிறது.

2022 முதல் 2025 வரை ஒவ்வொரு செப்டம்பர் மாதத்தில் புதிய விண்ணப்பங்களும் 2023 முதல் 2026 வரை புதுப்பிக்கப்படும் விண்ணப்பங்களும் மேம்பட்ட எஸ்-பாஸ் சம்பளத்திற்கு தகுதி பெற்றிருப்பது மற்றொரு நடவடிக்கையாகும்.

“உள்ளூர் ஊழியர்கள் அதிகம் சேராத, தானியக்கமாக்க முடியாத வேலைகளுக்கு ஆள்களை சேர்க்க அனுமதிக்கப்படுவதால் நிறுவனங்கள் பலனடையும்,” என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

ஒன்பது வேலைகளுக்கான எஸ்-பாஸ் வைத்திருப்பவர்களை தொடர்ந்து பணியில் அமர்த்த முதலாளிகள் விரும்பினால் அதற்கு அனுமதியளிக்கப்படும்.

செவ்வாய்க்கிழமை இந்திய உணவகங்களில் பணியாற்றும் சமையல்காரர்களுக்கான விண்ணப்ப விவரங்களையும் அமைச்சு வெளியிட்டிருந்தது. என்டிஎஸ் நாடுகளிலிருந்து வொர்க் பர்மிட் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் உணவகங்கள், மனிதவள அமைச்சின் இணையத் தளத்தில் உள்ள ‘FormSG’ வழியாக செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

இந்திய உணவுத் துறை, அரசாங்க அமைப்பு ஆகியவற்றின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவால் புதிய விண்ணப்பங்களின் தகுதி மதிப்பிடப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

இந்தியா, பங்ளாதேஷ், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து சமையல்காரர்களை வேலைக்கு அமர்த்த முடியும் என்று அது நினைவூட்டியது.

சிங்கப்பூர் இந்திய உணவக சங்கத்தின் கௌரவ செயலாளரான எஸ். மகேந்திரன், சிங்கப்பூர் உணவகங்களுக்கு அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை பேருதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

“பாரம்பரிய இந்திய உணவுகளை வழங்கி சிங்கப்பூரில் இந்திய பாரம்பரியத்தை கட்டிக்காக்க முடியும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, இலங்கை, பங்ளாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து சமையல் நிபுணர்களை வரவழைக்கலாம்.
இந்தியா, இலங்கை, பங்ளாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து சமையல் நிபுணர்களை வரவழைக்கலாம். - படம்: முத்துஸ்கறி ஃபேஸ்புக்
குறிப்புச் சொற்கள்