பாதுகாப்புக் குறைபாடு: கழிவு அகற்றும் நிலையத்தில் வேலை நிறுத்த உத்தரவு

பாதுகாப்புக் குறைபாடு: கழிவு அகற்றும் நிலையத்தில் வேலை நிறுத்த உத்தரவு

1 mins read
116ab5b5-88dd-4c11-a8c4-67bec05e2e3d
லீடிங் பயோ-எனர்ஜி நிறுவனத்துக்கு $10,000 அபராதம் விதிக்கப்பட்டது. - படம்: மனிதவள அமைச்சு

லீடிங் பயோ-எனர்ஜி எனும் கழிவு அகற்றும் நிலையம் ஒன்றில் வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்புப் பணிகள் நடத்தப்பட்டதை அடுத்து பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. இதனால் வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நிலையத்தில் சேதமடைந்த தூண்கள் மீது கழிவுப் பொருள்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்ததாக மனிதவள அமைச்சு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. இதன் காரணமாக அந்த நிலையம் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

வாகனங்கள் மோதிக்கொள்ளாமல் இருக்க நிலையத்தில் போதுமான போக்குவரத்து நிர்வாகம் இல்லை என்று கண்டறியப்பட்டது.

கட்டடத்தின் உள்கட்டமைப்பு சரியான வகையில் பராமரிக்கப்படவில்லை என்றும் பழுதடைந்த பாரந்தூக்கிகள் முறையாக நிறுத்திவைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்பாக லீடிங் பயோ-எனர்ஜி நிறுவனத்துக்கு $10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்