இடைவார் கொண்டு மகனை 100 முறை அடித்ததாக ஒப்புக்கொண்ட தாய்

இடைவார் கொண்டு மகனை 100 முறை அடித்ததாக ஒப்புக்கொண்ட தாய்

1 mins read
9b6795d0-b032-45bb-9ed9-44f900a20af4
தனது பராமரிப்பின்கீழ் இருக்கும் பிள்ளையைத் துன்புறுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு எட்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $8,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். - படம்: தமிழ் முரசு

தனது 6 வயது மகன் குறும்புத்தனத்துடன் நடந்துகொண்டதால் அவனை இடைவார் கொண்டு 100 முறை அடித்ததாகவும் குத்தியதாகவும் துன்புறுத்தியதாகவும் பெண் ஒருவர் ஒப்புக்கொண்டார்.

மகனை அடித்துத் துன்புறுத்திய மறுநாள் அவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். தனது மகனைத் தன் காதலர் அடித்ததாக மருத்துவரிடம் அப்பெண் பொய் கூறினார்.

தனது பராமரிப்பின்கீழ் இருந்த பிள்ளையைத் துன்புறுத்திய குற்றத்தை அந்த 32 வயதுப் பெண் வியாழக்கிழமையன்று ஒப்புக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் அடையாளத்தைக் காக்க பெண்ணின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தப் பெண் தனது மகனை அடித்துத் துன்புறுத்திய காட்சிகள் அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

அப்பெண்ணை மனநலக் கழக மருத்துவர் பரிசோதனை செய்தார். அவருக்கு மனஅழுத்தம் காரணமாக ஒருவகைக் குறைபாடு இருந்தது தெரியவந்தது.

அப்பெண்ணுக்கு மேலும் சில பிள்ளைகள் உள்ளனர்.

தனது பராமரிப்பின்கீழ் உள்ள பிள்ளையைத் துன்புறுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அப்பெண்ணுக்கு எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $8,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்