பிரதமர் லீ சியன் லூங் ஆகஸ்ட் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேசிய தினப் பேரணி உரை நிகழ்த்துகிறார்.
பொது வீடமைப்புத் திட்டங்கள் எப்படி சரி செய்யப்படும் என்பது பற்றி அந்த உரையில் தான் விளக்கப்போவதாக அவர் ஏற்கெனவே தெரிவித்து இருக்கிறார்.
அனைத்து வகை வருமானத்தையும் கொண்ட சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் அரசாங்க வீடுகள் எட்டக்கூடியவையாக, தாக்குப்பிடிக்கக் கூடியவையாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு அரசாங்கம் பொது வீடமைப்புத் திட்டங்களைச் சரிசெய்யும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
ஓய்வு காலத்திற்காக மத்திய சேம நிதியில் போதிய பணத்தைக் கொண்டிராத சில முதிய ஊழியர்களுக்குக் கூடுதல் உதவிகளையும் தான் பேரணி உரையில் அறிவிக்கப்போவதாக ஆகஸ்ட் 8ஆம் தேதி தன்னுடைய தேசிய தினச் செய்தியில் பிரதமர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டுக்கான தேசிய தினப் பேரணி உரையை பிரதமர் லீ மாலை 6.45 மணிக்கு முதலில் மலாய் மொழியில் தொடங்குவார்.
பின்னர் இரவு 7 மணிக்கு மாண்டரின் மொழியிலும் இரவு 8 மணிக்கு ஆங்கிலத்திலும் உரையாற்றுவார்.
அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய கல்லூரியில் இடம்பெறும் தேசிய தினப் பேரணி உரை உள்ளூர் தொலைக்காட்சி ஒளிவழிகளிலும் வானொலி நிலையங்களிலும் நேரடியாக ஒலி, ஒளிபரப்பப்படும்.
மேலும் கீழ்க்காணும் இணையத் தளங்களிலும் பேரணி உரை நேரலையாக இடம்பெறும்.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் அலுவலக யூடியூப் (www.youtube.com/pmosingapore);
பிரதமர் லீயின் ஃபேஸ்புக் பக்கம் (www.facebook.com/leehsienloong)
ரீச் அமைப்பின் ஃபேஸ்புக் பக்கம் (www.facebook.com/REACHSingapore)
Mewatch.sg, cna.asia, CNA யூடியூப் and 8world.com
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் இணையத் தளம், ஃபேஸ்புக் பக்கம், யூடியூப் தளம் ஆகியவற்றில் பேரணி உரையின் நேரலை இடம்பெறும்.