தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘தலைமைத்துவப் புதுப்பிப்பு காலஅட்டவணையில் மாற்றமில்லை’

2 mins read
78e00799-a158-4d44-aec3-580b7c9b446b
அங் மோ கியோ மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் இவ்வாண்டிற்கான தேசிய தினப் பேரணி உரையை ஆற்றிய பிரதமர் லீ சியன் லூங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆளும் மக்கள் செயல் கட்சி[Ϟ]யின் தலைமைத்துவப் புதுப்பிப்பிற்கான தனது கால அட்டவணையில் மாற்றம் இல்லை என்று பிரதமர் லீ சியன் லூங் அறிவித்துள்ளார்.

நான்காம் தலைமுறைக் குழுவிற்கும் அவர்களின் செயல்திட்டங்களுக்கும் ஆதரவு அளிப்பதே மேலும் மேலும் தனது பணியாக ஆகி இருக்கிறது என்று தேசிய தினப் பேரணி உரையில் திரு லீ கூறினார்.

அண்மையில் சர்ச்சைக்கிடமான பல விவகாரங்கள் சிங்கப்பூரர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதைச் சுட்டிக்காட்டிய திரு லீ, அத்தகைய விவகாரங்களால் தன்னுடைய தலைமைத்துவப் புதுப்பிப்பு காலஅட்டவணை தாமதம் அடையாது என்று உறுதிபடக் கூறினார்.

அத்தகைய விவகாரங்கள் ஒவ்வொன்றையும் முழுமையாக, ஒளிவுமறைவு இல்லாமல் அரசாங்கம் கையாண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தன்னுடைய 70ஆவது பிறந்த[Ϟ]நாளுக்கு முன்பாக 2022ஆம் ஆண்டிலேயே பிர[Ϟ]தமர் பதவியை ஒப்படைத்துவிட்டு பதவியில் இருந்து விலகிவிடுவதுதான் தனது தொடக்கத் திட்டமாக இருந்ததாகக் குறிப்பிட்ட பிரதமர் லீ, கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காரணமாக அந்தத் திட்டம் பாதிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

இப்போது கொவிட் ஒடுங்கி[Ϟ]விட்டது. ஆகையால் தமது அரசியல் தலைமைத்துவப் புதுப்பிப்புத் திட்டங்கள் மீண்டும் தொடங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

‘முன்னேறும் சிங்கப்பூர்’ இயக்கத்தை நான்காம் தலை[Ϟ]முறைத் தலைவர்கள் விரைவில் நடத்தி முடிக்கவிருக்கிறார்கள்.

இருந்தாலும்கூட, அவர்களுடைய பயணம் இப்போதுதான் தொடங்குகிறது. சிங்கப்பூரின் எதிர்காலம் அவர்களைச் சார்ந்து இருக்கிறது.

அந்தக் குழுவினர் மக்களுடன் சேர்ந்து பாடுபட்டு சிங்கப்பூரை முன்னேற்றிச் செல்வார்கள். துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் மீதும் அவர்களுடைய குழுவினர் மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்று திரு லீ குறிப்பிட்டார்.

‘‘நாங்கள் அதே அடிப்படை கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறோம். அதாவது நாங்கள் சிங்கப்பூருக்குப் பொறுப்பாளர்கள். நாட்டிற்குத் தலைமை தாங்கி, நாட்டின்மீது அக்கறை கொள்ளும் பொறுப்பு உள்ளவர்கள். பொறுப்பாளர்கள் என்ற முறையில் எங்களின் கால நேரம் நிரந்தரமானதல்ல.

‘‘ஆனாலும், பல தலைமுறைகளுக்கும் சிங்கப்பூரை நாம் பலப்படுத்துகிறோம். சிறப்புமிக்க, வலுமிக்க சிங்கப்பூரை, நம்மைத் தொடர்ந்து பொறுப்பேற்பவர்களிடம் ஒப்படைப்பதே நாட்டிற்கு நாம் செய்யும் தலைசிறந்த சேவையாகும்,’’ என்று திரு லீ குறிப்பிட்டார்.

திரு லாரன்ஸ் வோங்கிற்கும் அவருடைய குழுவிற்கும் முழு ஆதரவை இப்போதும் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும் வழங்கும்படி சிங்கப்பூரர்களை திரு லீ கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூரின் வரலாறு அசாதாரணமான ஒன்று என்று கூறிய அவர், அதனுடைய தலைசிறந்த பகுதிகள் இனிமேல்தான் எழுதப்பட வேண்டும் என்று கூறினார்.

நம்முடைய நன்னெறிகள், பரஸ்பர நம்பிக்கை, நம்முடைய கனவுகள் ஆகியவற்றோடு ஐக்கியமாக, புதிய எழுச்சியுடன், சக்தியுடன் முன்னேறி வருங்[Ϟ]காலத் தலைமுறையினருக்குச் சிறப்புமிக்க ஒளிமயமான சிங்கப்பூரைச் சாதிப்போம் என்று திரு லீ அறைகூவல் விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்