துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்கள் விரிவுபடுத்தப்படும்

பல்வேறு நடவடிக்கைகளில் பங்குகொண்டு, மகிழ உதவும் துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்களின் கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும்.

அதிகமான மூத்தோர் துடிப்புடனும் நலமுடனும் இருக்க உதவும் வகையில் அந்நிலையங்களின் சேவைகளும் அவை சென்றடைவதும் மேம்படுத்தப்படும்.

கரவோக்கே, நடன வகுப்புகள், காப்பி முனைகள் என அந்நிலையங்கள் எல்லாருக்கும் ஏதேனும் ஒன்றைக் கொண்டிருக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரையில் குறிப்பிட்டார்.

மக்கள்தொகை வேகமாக மூப்படையும் நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் திகழ்கிறது.

இப்போது, சிங்கப்பூரர்களில் ஐவரில் ஒருவர் 65 வயதும் அதற்கும் மேற்பட்டவர்கள். வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் அவ்விகிதம் நால்வரில் ஒருவராக உயரும்.

அதாவது, மூப்படைந்த சமுதாயம் என்ற நிலையிலிருந்து மிக்க மூப்படைந்த சமுதாயம் என்ற நிலையை நோக்கி சிங்கப்பூர் சென்றுகொண்டிருக்கிறது.

இதனையடுத்து, “நம்முடைய மூத்தோர் நன்முறையில் மூப்படைய நாம் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது,” என்று பிரதமர் லீ கூறினார்.

பராமரிப்பு வழங்குவதில் அரசாங்கம் பெரும்பங்கு ஆற்றினாலும், மூத்தோரும் தங்களைக் கவனித்துக்கொள்ள தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொருவரும் தங்களது உடல்நலத்தின்மீது அதிகப் பொறுப்பு எடுத்துக்கொள்ளச் செய்வதை நோய்த்தடுப்புப் பராமரிப்பு உத்தியான ‘ஹெல்தியர் எஸ்ஜி’ இலக்கு கொண்டுள்ளதாகத் திரு லீ குறிப்பிட்டார்.

ஒருவர் அத்திட்டத்தில் சேரும்போது, தனிப்பயனாக்கப்பட்ட சுகாதாரத் திட்டத்தை அவர்கள் பெறுவர். மேலும் துடிப்புடன் இருப்பது எப்படி, ஊட்டச்சத்துமிக்க உணவு, புகைப்[Ϟ]பதைக் கைவிடுவது போன்றவை தொடர்பில் ஒருவரது மருத்துவர் அவருக்கு வழிகாட்டலாம்.

தாமும் தம் துணைவியார் ஹோ சிங்கும் ‘ஹெல்தியர் எஸ்ஜி’ திட்டத்தில் இணைந்துவிட்டதாகவும் அவர் சொன்னார்.

நலமாக மூப்படைதல் என்பது உடலளவிலும் மனத்தளவிலும் நன்றாக இருப்பது என்றார் அவர்.

தனிமை மூத்தோருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்ப[Ϟ]தாகச் சுட்டிய திரு லீ, அவர்கள் சமூகத்துடன் தொடர்பில் இருப்பதும் முக்கியம் என்றார்.

சமூகத்துடன் ஈடுபாடு கொண்டிருக்க மூத்தோருக்கு உதவும் நோக்கில், ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு [Ϟ]தீவு முழுவதும் துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்களை ஏற்படுத்தியது.

மூத்தோர் அர்த்தமுள்ள நட[Ϟ]வடிக்கைகளில் நேரத்தைச் செலவழிக்க அந்நிலையங்கள் உதவுகின்றன. அங்கு அவர்கள் சேர்ந்து உணவருந்தி, நட்பை ஏற்படுத்திக்கொள்ளவும் முடிகிறது.

மூத்தோர் தங்களைத் துடிப்பாகவும் நலமாகவும் வைத்துக்கொள்ள அந்நிலையங்கள் மதிப்பு[Ϟ]மிக்க இடங்களாகத் திகழ்கின்றன என்றார் பிரதமர் லீ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!