ஊழலில் ஈடுபட்ட குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரியான டியோ ஹுவீ பெங்கிற்கு இரண்டு ஆண்டுகள், ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வெளிநாட்டு பாலியல் தொழிலாளி ஒருவரிடமிருந்து டியோ ரொக்கம் மட்டுமின்றி பாலியல் சலுகைகளையும் பெற்றுக்கொண்டார்.
சீனாவைச் சேர்ந்த லியாங் சிங்லானிடமிருந்து 49 வயது டியோ பணம் பெற்றுக்கொண்டார்.
இதன் காரணமாக அவருக்கு $2,600க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதியிலிருந்து டியோ தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மூத்த அதிகாரியாக இருந்த டியோ திட்டமிட்டே இக்குற்றங்களைப் புரிந்ததாக தீர்ப்பளிப்பதற்கு முன்பு நீதிபதி விக்டர் இயோ கூறினார்.
தீர்ப்பை எதிர்த்து தமது கட்சிக்காரர் மேல்முறையீடு செய்ய இருப்பதாக டியோவின் வழக்கறிஞர் திரு நாராயாணன் விஜயகுமார் தெரிவித்தார்.
$50,000 பிணையில் டியோ விடுவிக்கப்பட்டுள்ளார்.

