கேத்தே திரையரங்குகளை நடத்தும் எம்எம்2ஏஷியா நிறுவனம் மேலும் ஒரு திரையரங்கை மூடுகிறது.
பார்க்வே பரேட் கடைத்தொகுதியில் உள்ள கேத்தே திரையரங்கு இம்மாதம் 27ஆம் தேதியன்று மூடப்படுகிறது.
இதுவே கடந்த ஓராண்டில் மூடப்படும் மூன்றாவது கேத்தே திரையரங்கு.
பார்க்வே பரேட்டில் உள்ள கேத்தே திரையரங்கு 2017ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. கடைத்தொகுதியின் ஏழாவது மாடியில் இருக்கும் அந்தத் திரையரங்கில் மொத்தம் 800 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம்.
எஞ்சியுள்ள ஐந்து திரையரங்குகள் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


