சிங்கப்பூரில் $1 பில்லியன் சட்டவிரோத பண விவகாரம் தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் சென் சிங்யுயான் என்பவரும் ஒருவர்.
சீனாவில் கடைசியாக தெரியவந்த இவருடைய முகவரி மூலம் இவர், சீனாவின் ஃபூஜியன் மாநிலத்தின் ஆங்ஸி வட்டாரத்தில் இருக்கும் நாங்டு என்ற தேயிலைத் தோட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவருகிறது.
சென் 2019 முதல் தொலைத்தொடர்பு தில்லுமுல்லு விவகாரம் தொடர்பில் தேடப்பட்டு வருவதாக சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் பிறப்பித்து இருக்கும் கைதாணை தெரிவிக்கிறது.
பில்லியன் வெள்ளி கள்ளப்பண விவகாரத்தில் சம்பந்தப்பட்டு இருக்கும் வாங் தேஹாய், வாங் ஷுய்மிங் என்ற இதர இரண்டு சந்தேகப்பேர்வழிகளின் கடைசியாக தெரியவந்த சீன நாட்டு முகவரிகளைப் பார்க்கும்போது அவர்கள் ஸியாமென் என்ற நகரின் பெரும் விலையுள்ள அடுக்குமாடி வீடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த நபர்களையும் சீனக் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

