பிள்ளை துன்புறுத்தல் விவகாரத்தின் தொடர்பில் கிண்டர்லேண்ட் பாலர்பள்ளியின் கிளை ஒன்றின் தலைவரும் அக்கிளையை நடத்துபவர்கள்மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாலர்கல்வி மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
கிண்டர்லேண்ட பாலர்பள்ளிகளில் சில ஆசிரியர்கள் பிள்ளைகளைத் துன்புறுத்தியதாக நம்பப்படுகிறது; சம்பந்தப்பட்ட கிண்டர்லேண்ட் கிளைக்கு அந்த விவகாரத்தில் இருக்கும் பங்கை ஆராய விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளவேண்டிய தங்கள் கடமையிலிருந்து சம்பந்தப்பட்டோர் தவறியது தெரிய வந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் பாலர்கல்வி மேம்பாட்டு அமைப்பு புதன்கிழமையன்று குறிப்பிட்டது.
“பள்ளியில் பயிலும் எல்லா பிள்ளைகளின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த பாலர்கல்வி மேம்பாட்டு அமைப்பு அப்பள்ளியை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது,” என்று அமைப்பு சொன்னது. மேலும், வகுப்பறைகளைக் கவனித்து நன்கு வழிநடத்துவது தொடர்பான ஆலோசனைகளைத் தங்கள் ஆசிரியர்களுக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கிண்டர்லேண்ட் கிளைக்கு உத்தரவு வழங்கப்பட்டிருப்பதகாவும் அமைப்பு குறிப்பிட்டது.