அதிபர் தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரையும் தான் அங்கீ[Ϟ]கரிக்கவில்லை என்று பாட்டாளிக் கட்சி தெரிவித்து உள்ளது.
அவர்களுக்கு உதவும்படி கட்சி உறுப்பினர்கள் அல்லது தொண்டூழியர்கள் யாரையும் அதிகாரபூர்வ முறையில் தான் கேட்டுக்கொள்ளவில்லை என்றும் கட்சியின் பேச்சாளர் கூறினார்.
மக்களால் தேர்ந்து எடுக்கப்[Ϟ]படும் அதிபர் முறை தேவையில்லை என்றும் வழக்கமான சடங்குபூர்வ அதிபர் முறை மீண்டும் நடப்புக்கு வரவேண்டும் என்றும் கடந்த முப்பதாண்டு காலமாக கட்சி இடைவிடாது குரல் கொடுத்துவருவதாக அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதி பெறுவதற்கான இப்போதைய நிபந்தனைகள், மக்கள் செயல் கட்சி அங்கீகரிக்கும் வேட்பாளர்களுக்குச் சாதகமாகவே இடம்பெறக்கூடியவையாக உள்ளன என்றும் மக்கள் தேர்ந்து எடுக்கும் அதிபர் முறை நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கீழறுக்கிறது என்றும் பாட்டாளிக் கட்சி நம்புவதாக அந்தப் பேச்சாளர் கூறினார்.
அதிபர் தேர்தலில் மூவர் போட்டியிடுகிறார்கள். திரு இங் கொக் சொங், 75, திரு தர்மன் சண்முகரத்னம், 66, திரு டான் கின் லியான் 75, ஆகிய அம்மூவரும் சுயேச்சை வேட்பாளர்கள்.
அவர்களில் திரு டான் கின் லியானுக்கு பிரபலமான பல அரசியல் புள்ளிகள் ஆதரவு தெரிவித்து இருப்பதை அடுத்து அதிபர் தேர்தலுக்கு அரசியல் சாயம் பூசும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், திரு டான் கின் லியான் தேர்ந்து எடுக்கப்பட்டால் அவரை ஆதரிக்கும் கட்சித் தலைவர்கள் அவரை ஆட்டுவிக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று ஏற்கெனவே திரு இங் எச்சரித்து இருக்கிறார்.
முன்னாள் மூத்த அமைச்சரான திரு தர்மன், நாட்டின் சேமிப்புகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதன் தொடர்பிலான விதிமுறைகளை ஏற்படுத்தியதில் சம்பந்தப்பட்டு இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதனை வைத்துப் பார்த்தால் திரு தர்மன் அதிபரானால், அந்த ஒருவரே அதே முறையைக் கண்காணிக்கும் ஒரு நிலை ஏற்பட வழி ஏற்பட்டு விடுமோ என்று திரு இங் கேள்வி எழுப்பினார்.
திரு தர்மன் கடந்த ஜூலையில் அரசாங்கத்தில் இருந்தும் மக்கள் செயல் கட்சியில் இருந்தும் விலகினார்.
வேட்பாளர்களின் குணநலன்கள், சாதனைகளை மதிப்பிட்டு வாக்களிக்கும்படி திரு தர்மன் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
இவ்வேளையில், தனக்கு எதிர்த்தரப்பு அரசியல் புள்ளிகள் ஆதரவு தெரிவித்து இருப்பது பற்றி கருத்து தெரிவித்த திரு டான், அதன்மூலம் அதிபர் தேர்தலுக்கு அரசியல் சாயம் பூசப்படவில்லை என்றும் அந்தத் தலைவர்கள் கட்சி சார்பில் அல்லாது தனிப்பட்ட முறையில்தான் தனக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

