வேலையிட விபத்துகளில் மூவர் மரணம்; மூவருக்குச் சிறைத்தண்டனை

வேலையிட விபத்துகளில் மூவர் மரணம்; மூவருக்குச் சிறைத்தண்டனை

1 mins read
fecf19c5-b613-42c5-a671-019b85ea097f
வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் மூன்று பேருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

தனித்தனியான வேலையிட விபத்துகளில் மூன்று பேருக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டதற்காக ஆகஸ்ட் மாதம் மூவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த மூவர் மீதும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டதாக மனிதவள அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்தது.

அவர்களில் சான் யோக் ஃபோங், 54, என்பவர் ராயல் கிரவுன் ஃபிஷ்ஷரி&டிரேடிங் என்ற நிறுவனத்தின் இயக்குநர்.

அந்த நிறுவனத்தில் வேலை செய்த கோ கோ என்ற மியன்மார் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் மரணம் தொடர்பில் ஆகஸ்ட் 2ஆம் தேதி சானுக்கு இரண்டு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆசியாபீல்டு கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற நிறுவனத்தில் பொருள்களைத் தூக்கும் இயந்திரத்தை இயக்குபவராக வேலை பார்த்த அழகப்பன் கணேசன், 25, என்பவருக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி 18 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குஞ்சப்பா மகேஷ் என்ற ஊழியர் மரணம் தொடர்பில் கணேசனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பிஎஸ்ஏ கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாரந்தூக்கி வாகன இயக்குநராக வேலை பார்த்த முகம்மது அஷ்ரஃப் ரோஸ்லிக்கு வரதன் பிரபு என்ற ஊழியரின் மரணம் தொடர்பில் ஆகஸ்ட் 25ஆம் தேதி ஏழு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்