சைக்கிளில் 9,000 கிலோமீட்டரைக் கடந்து சிங்கப்பூர் வந்த 65 வயது ஆடவர்

சைக்கிளில் 9,000 கிலோமீட்டரைக் கடந்து சிங்கப்பூர் வந்த 65 வயது ஆடவர்

1 mins read
151fc8b3-9f38-4626-8c45-ead7c54f826f
சைக்கிளில் ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த டாக்டர் இயன் வாலிஸ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 65 வயது ஆடவர் ஒருவர் 9,000 கிலோமீட்ருக்கும் அதிகமான தூரத்தை சைக்கிளில் கடந்து சிங்கப்பூருக்கு வந்துள்ளார்.

டாக்டர் இயன் வாலிஸ் எனும் அந்நபர் இவ்வாண்டு மே மாதம் ஒன்றாம் தேதி ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பெராவிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டார். ஆஸ்திரேலியா, திமோர் லெஸ்தே, இந்தோனீசியா ஆகிய நாடுகளின் பல்வேறு பகுதிகளைக் கடந்து புதன்கிழமையன்று அவர் சிங்கப்பூருக்கு வந்தார்.

ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரிலிருந்து திமோர் லெஸ்தே தலைநகர் டிலிக்கு டாக்டர் வாலிஸ் விமானத்தில் சென்றார். இந்தோனீசியாவில் உள்ள தீவுகளுக்கிடையே பயணம் மேற்கொள்ளும்போது அவர் ஃபெரி படகில் சென்றார்.

தனது பயணம் தொடங்கி 129வது நாளில் ஓய்வுபெற்ற விஞ்ஞானியான டாக்டர் வாலிஸ் சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்தார்.

டாக்டர் வாலிஸ் சிங்கப்பூருக்கு வந்தவுடன் வாழ்த்து தெரிவிக்க, கோரா எனும் அவரின் 56 வயது மனைவி விமானத்தில் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். கணவன், மனைவி இருவரும் வெளிப்புறச் சூழலை நேசிக்கும் சைக்கிளோட்டப் பிரியர்கள்.

குறிப்புச் சொற்கள்