தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குறைந்த வருமானக் குடும்பங்களுக்குஇலவசமாக அதிக காய்கறி, முட்டை, உணவு

2 mins read
be05301c-da8c-4199-b82f-059d494318fd
பூன் லேயில் உள்ள சமூக சிற்றங்காடியிலிருந்து திரு சுபாஷ் சுவாமிநாதனும் அவரது பணிப்பெண்ணும் புதிய காய்கறிகளை பெற்றுக் கொள்கின்றனர். - படம்: ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா

சிங்கப்பூரின் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஒரு நற்செய்தியாக அதிக அளவு புதிய காய்கறி, முட்டை மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படவிருக்கிறது.

‘ஃபுட் பிரம் த ஹார்ட்’ என்ற அறப்பணியின் சமூக சிற்றங்காடிகள் வழியாக இவற்றை வழங்குவதற்காக ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா அடுத்த மூன்று ஆண்டுகளில் 300,000 நிதி அளிக்கவிருக்கிறது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சத்தான உணவு வழங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ‘RWSEatWell@Community Shop’ முயற்சி இடம்பெறுகிறது.

உணவு அறப்பணி அமைப்பு நடத்திய ஆய்வில், மளிகைப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் அதிக குடும்பங்கள் நீண்ட ஆயுளை அளிக்கும் உணவைத் தேர்ந்தெடுப்பது கண்டறியப்பட்டது.

இதனால் சிங்கப்பூரின் பண்ணைகளில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் நேரடியாக சமூக சிற்றங்காடிகள் மூலம் விநியோகிக்கப்படவிருக்கிறது.

சீன முட்டைக்கோஸ், கீரை, புரோகோலி மற்றும் முட்டைகள் போன்றவை அவற்றில் அடங்கும்.

ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு மாதமும் தற்போது புதிய உணவு வகையிலிருந்து இரண்டு கூடுதலானப் பொருட்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு குடும்பமும் 12 அத்தியாவசிய கெட்டுப்போகாத உணவுப் பொருட்களை பெற முடியும்.

பூன் லே, லெங்கோக் பாரு, மவுண்ட்பேட்டன், பொங்கோல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள நான்கு சிற்றங்காடிகள், தீவு முழுவதும் உள்ள 2,400 குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு சேவையாற்றி வருகின்றன.

இது குறித்துப் பேசிய ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவின் மூத்த அதிகாரியான லோ சு கிம், சிங்கப்பூரில் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவது முதல் குறிக்கோள் என்றார்.

உள்ளூர் பண்ணைகளில் விளைவிக்கப்பட்ட காய்கறி, முட்டைகளை வாங்குவதால் அவர்களுக்கும் ஆதரவு அளிப்பது இரண்டாவது குறிக்கோள் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்