தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$579மி. சுற்றுச்சூழல் நிதி தொடக்கம்

1 mins read
0588cf67-b46e-4d2b-8a97-4a5bb5cd27fd
கரிமக்கழிவைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு முன்னேறி வரும் நிறுவனங்களுக்கு இந்தப் புதிய நிதி கைகொடுக்கும். - படம்: சாவ் பாவ் 

சிங்கப்பூர் பங்குச் சந்தையும் பிளாக்ராக் என்ற உலகின் ஆகப் பெரிய சொத்து நிர்வாக நிறுவனமும் சேர்ந்து பருவநிலை நிதி ஒன்றை தொடங்கி இருக்கின்றன.

ஆசியாவில் சுற்றுச்சூழல் முதலீடுகளை ஊக்குவிக்க அந்த நிதி பயன்படுத்தப்படும்.

‘ஐஷேர்ஸ் எம்எஸ் ஏசியா’ பங்குச் சந்தை பரிவர்த்தனை நிதி US$426 மில்லியன் (S$579 மில்லியன்) மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டிருக்கிறது.

இதன்மூலம் சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட ஆகப் பெரிய பங்குச் சந்தை பரிவர்த்தனை பங்கு முதல் நிதியாக அது ஆகி இருக்கிறது.

அந்த நிதி, முதலீட்டாளர்களுக்கு மிகவும் பரந்த பன்மய அடித்தள முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது.

குறைந்த கரிமக்கழிவைச் சாதிப்பதில் முன்னேற்றம் காணும் நிறுவனங்களுக்கு இந்தப் புதிய நிதி கைகொடுக்கும்.

இந்த வட்டாரத்தின் ஆகப் பெரிய சொத்து நிறுவனமான புருடென்ஷியல் அந்த நிதியை நிர்வகிக்கிறது.

அதற்கு முதலீட்டு அமைப்புகளைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு ஆதரவு அளிக்கிறது.

தெமாசெக், சிங் லைஃப் உள்ளிட்ட அமைப்புகள் இதில் உள்ளன.

குறிப்புச் சொற்கள்