வெப்3 இணையப் பணப்பையை இணைந்து சோதனையிடும் சர்க்கிள், கிராப்

1 mins read
36797bed-f41c-4655-8cd5-55fcb153ceb0
வியாழக்கிழமையன்று இந்த ஏற்பாடு அறிவிக்கப்பட்டது. - படம்: சர்க்கிள் / ஃபேஸ்புக்

உலகளாவிய கட்டணங்கள் நிறுவனமான சர்க்கிள் இன்டர்நெட் ஃபைனான்ஷியல், சிங்கப்பூரில் கிராப் நிறுவனத்துடன் இணைந்து வெப்3 இணையப் பணப்பை முறையைச் சோதனையிடவுள்ளது. அது, மின்னிலக்க நாணயத்தில் செயல்படும் இணையப் பணப்பை.

வியாழக்கிழமை முதல் கிராப் செயலியைப் பயன்படுத்துவோர் கிராப் வெப்3 பணப்பை (கிராப் வெப்3 வாலட்) எனும் இணையப் பணப்பை சேவையை அமைத்துக்கொள்ளலாம். அதனைக் கொண்டு பயனீட்டாளர்கள் மின்னிலக்கப் பேரேட்டுப் (என்எஃப்டி) பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம், பரிசுகளை வெல்லலாம்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இயங்கும் சர்க்கிள் நிறுவனம், தனது வெப்3 இணைய முறைச் சேவைகளைக் கொண்ட தளம் கிராப் செயலியில் சேர்க்கப்படும் என்று வியாழக்கிழமையன்று தெரிவித்தது. வெப்3, ஓர் அதிநவீன இணைய முறையாகும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்