சுண்டா பெங்கொலின் குட்டியை அதிகாரியிடம் விற்ற ஆடவர்

சுண்டா பெங்கொலின் குட்டியை அதிகாரியிடம் விற்ற ஆடவர்

1 mins read
89254082-deb0-4fc2-9cda-169b3cdd0e24
தேசிய பூங்காக் கழகத்தின் எழுத்துபூர்வ அனுமதியின்றி சுண்டா எறும்புதின்னி போன்ற பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

சுண்டா எறும்புதின்னி (பெங்கொலின்) குட்டியை மாறுவேடத்திலிருந்த தேசிய பூங்காக் கழக அதிகாரியிடம் விற்ற குற்றச்சாட்டை 20 வயது எடி ஹய்ரிசான் ரொம்மி ரம்சான் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

சுண்டா எறும்புதின்னி விலங்கினம், வனவிலங்கு (பாதுகாக்கப்படும் வனவிலங்கு இனங்கள்) விதிமுறைகளின்கீழ் பாதுகாக்கப்படுவதாக தேசிய பூங்காக் கழக வழக்கறிஞர் ‌ஷஃபியுதின் ஓங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எடியும் மேலும் மூவரும் 2022 டிசம்பர் 22ஆம் தேதி பேய் நடமாட்டத்தைப் பார்ப்பதற்காக புக்கிட் பிரவுன் இடுகாட்டுக்குச் சென்றிருந்தனர். அங்கே சுண்டா எறும்புதின்னிக் குட்டியை அவர்கள் கண்டெடுத்தனர்.

அந்த எறும்புதின்னியை மாஸ்டர்மார்க் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்குக்கிடங்கில் எடி வைத்திருந்தார். அந்த நிறுவனத்தில்தான் எடி வேலை செய்துவந்தார்.

எடிக்குப் பணம் தேவைப்பட்டதால், தனது உறவினரின் துணையுடன் எறும்புதின்னியை $500க்கு விற்பதாக டெலிகிராமில் விளம்பரம் செய்தார்.

டிசம்பர் 26ஆம் தேதி, எறும்புதின்னியை விற்கச் சென்ற எடி, கையும் களவுமாகப் பிடிபட்டார். அவருக்கு நவம்பர் முதல் தேதி தீர்ப்பளிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்