சிங்கப்பூரின் 6வது பல்கலைக் கழகமான சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக் கழகம் (எஸ்யுஎஸ்எஸ்) அடுத்த பத்து ஆண்டுகளில் 40,000 மாணவர்கள் வரை சேர்க்க திட்டமிட்டுள்ளது.
முழுநேர, பகுதிநேர மாணவர்கள் இதில் அடங்குவர். தற்போது 30,000 மாணவர்கள் இந்தப் பல்கலைக் கழகத்தில் பயின்றுவருகின்றனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், குறுகியகால தொடர்கல்வி மற்றும் பயிற்சி மாணவர்கள் ஆவர்.
சென்ற ஜனவரியில் எஸ்யுஎஸ்எஸ்ஸுக்குத் தலைவராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட பேராசிரியர் டான் டாய் யோங், தொடர்கல்வி மற்றும் பயிற்சி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மாணவர் சேர்க்கை மேலும் கூடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதுநிலைப் பட்டக் கல்வியும் விரிவுபடுத்தப்படவிருக்கிறது. இப்பல்கலைக் கழகத்தின் புதிய வளாகம் 2030ஆம் ஆண்டில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிளமெண்டியில் உள்ள வளாகத்தை அது வாடகைக்கு எடுத்துள்ளது.