11வது மாதமாக ஏற்றுமதி குறைந்தது

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள், ஆண்டு அடிப்படையில் 11வது மாதமாக ஆகஸ்ட்டில் சரிந்தன. இந்தோனீசியாவைத் தவிர சிங்கப்பூர் ஆக அதிகமாக ஏற்றுமதி செய்யும் மற்ற ஒன்பது நாடுகளுக்குக்கான உற்பத்திகள் குறைந்திருந்தன.

எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் 20.1% சரிந்தது. இது ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்த 15.8% சரிவைக் காட்டிலும் மோசம். ஜூலையில் பதிவான 20.3% சரிவை அடுத்து இந்த விகிதம் பதிவாகியுள்ளது.

ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் ஏற்றுமதிகள் 3.8% குறைந்தது. ஜூலையில் 3.5% குறைந்திருந்ததாக வர்த்தக அமைப்பான எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் (எண்டர்பிரைஸ்எஸ்ஜி) திங்கட்கிழமையன்று தரவுகள் வெளியிட்டது.

மின்னியல் சார்ந்த பொருள்களின் உற்பத்தி ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 21.1% வீழ்ச்சி கண்டது. ஜூலையில் இப்பிரிவில் 26.1% சரிவு பதிவானது.

இதற்கிடையே, மின்னியல் சாரா பொருள்களின் உற்பத்தி 19.9% குறைந்தது. ஜூலையில் இப்பிரிவில் 18.5% சரிவு பதிவானது. கப்பல்கள், படகுகளின் கட்டமைப்புகள், மருந்துகள் மற்றும் சிறப்புப் பயன்பாட்டுக்கான இயந்திரங்கள் ஆகியவை இப்பிரிவின் சரிவுக்குப் பெரும் காரணமாக அமைந்தன.

அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி, ஆக அதிகமான வீழ்ச்சி கண்டிருந்தது. ஏற்றுமதிகள் ஆகஸ்ட்டில் 32.4% சரிந்தன.

இந்நிலையில், சிங்கப்பூரின் எண்ணெய் வர்த்தகம் ஆண்டு அடிப்படையில் சரிந்தது. உள்நாட்டு எண்ணெய் ஏற்றுமதி ஆகஸ்ட்டில் 24.7% சுருங்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!