சிறுவர்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு 40 ஆண்டுச் சிறை

பதின்ம வயதுக்கு முந்திய பருவத்தில் இருந்த சிறுவர்களுடன் நண்பராகப் பழகி, அவர்களை குறிவைத்த 31 வயது ஆடவர் ஒருவருக்கு திங்கட்கிழமை 40 ஆண்டுச் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

மனநலப் பிரச்சினை இருப்பதாக கண்டறியப்பட்ட அவர், பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றங்களை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக ஒப்புக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட அந்த அறுவர் மீது அவர் புரிந்த பல்வேறு குற்றங்கள், பாலியல் வன்கொடுமையிலேயே மிக மோசமானவை என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வர்ணித்திருந்தனர்.

2012 முதல் 2014 வரை மூன்று சிறுவர்களை அந்த ஆடவர் பாலியல் வன்கொடுமை செய்தார். அப்போது அவர்கள் 10க்கும் 13 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருந்தனர்.

2014க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில், திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காக அந்த ஆடவர் பலமுறை சிறைக்குச் சென்று வந்தார்.

2019 முதல் 2020 வரை, தம் உடன்பிறப்பின் பிள்ளைகளை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அப்போது அவர்கள் ஆறு வயதுக்கும் ஒன்பது வயதுக்கும் இடைப்பட்டிருந்தனர்.

2019 அக்டோபரில் தம் அத்தை வீட்டில் அந்த ஆடவர் வசித்தபோது, அங்கு உறங்கிக்கொண்டு இருந்த ஒன்பது வயதுச் சிறுவனிடம் பாலியல் செயலில் ஈடுபட்டார்.

2020 ஆகஸ்ட்டில், பார்சல் விநியோகிக்கும் வேலை செய்த உறவினர் ஒருவர், அந்த ஆடவருக்கு வேலை வழங்க முன்வந்தார். தம் வீட்டில் வசிக்கவும் அந்த ஆடவருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

அந்த உறவினருக்கு முந்திய திருமணத்தில் பிறந்த எட்டு வயது மகனும் தற்போதைய திருமணத்தில் பிறந்த ஆறு வயது மகனும் உள்ளனர்.

2020 ஆகஸ்ட்டுக்கும் செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில், அந்த ஆறு வயதுச் சிறுவனை கழிவறைக்கு அழைத்துச் சென்ற அந்த ஆடவர், அவனின் கவனத்தைத் திசைதிருப்ப அவனுக்கு கைப்பேசியை வழங்கினார். அச்சிறுவன் கைப்பேசியில் விளையாடிக்கொண்டு இருந்தபோது அவனைப் பாலியல் வன்கொடுமை செய்தார்.

அதே வீட்டில் வசித்த அந்த ஆடவரின் தாயார், சிறுவன் மீது அந்த ஆடவர் படுத்துக் கிடந்ததைக் கவனித்ததைத் தொடர்ந்து, அவரது பாலியல் குற்றங்கள் 2020 அக்டோபரில் வெளிச்சத்துக்கு வந்தன.

இதைக் கேள்விப்பட்ட அந்தச் சிறுவர்களின் தந்தை, அந்த ஆடவரைத் தேடிக் கண்டுபிடித்து மற்ற குடும்ப உறுப்பினர்களைப் பார்க்க அழைத்துச் சென்றார்.

அதே நாள் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!