வாடகைக்கு எடுத்த வீட்டை உள்வாடகைக்கு விட்டதாக வெளிநாட்டவர் மீது குற்றச்சாட்டு

சிறை அதிகாரியிடமிருந்து வாடகைக்கு எடுத்த ஐந்து அறை வீட்டை, ஈராண்டுக்கும் மேல் மற்ற பலருக்கு உள்வாடகைக்கு விட்டு சட்டவிரோதத் தொழில் நடத்தியதாக வெளிநாட்டவர் ஒருவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத் தரப்பில் சாட்சியளித்த வாடகைதாரர்கள் இருவர், அந்த வீட்டில் ஒரு படுக்கைக்கு மாதத்திற்கு $230 முதல் $250 வரை கொடுத்ததாகக் கூறினர்.

ஒரு கட்டத்தில், அந்த வீட்டில் இருபதுக்கும் மேற்பட்டோர் தங்கியதாகவும் நம்பப்படுகிறது.

சட்டப்படி, சிங்கப்பூர் குடிமக்கள் மட்டுமே முழு வீட்டையும் வாடகைக்கு விடமுடியும். வீட்டின் வகையைப் பொறுத்து அதிகபட்சம் அறுவர் மட்டுமே வாடகைக்குத் தங்கமுடியும்.

சீனாவைச் சேர்ந்த 47 வயது குவோ லியன்சியாங், அனுமதியின்றி இரு வீடுகளை உள்வாடகைக்கு விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் வியாழக்கிழமை நடந்த நீதிமன்ற விசாரணையின்போது, குவோ குற்றச்சாட்டை மறுத்தார்.

வீடுகளை வாடகைக்கு விட்டதாக குவோ ஒப்புக்கொண்டபோதிலும், அதைத் திட்டமிட்டுச் செய்தது தானல்ல என்று அவர் கூறினார். திரு டியன் ரென் காய் என்ற சீன நாட்டவர், வீடுகளைத் தன்னிடம் ஒப்படைத்துவிட்டு, வாடகையை எடுத்துக் கொண்டதாக அவர் கூறினார். திரு டியன் சிங்கப்பூரைவிட்டு வெளியேறிவிட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன.

குவோ வாடகைக்கு விட்டதாகக் கூறப்படும் வீடுகளில் ஒன்று சிராங்கூன் நார்த் அவென்யூ 4-ன் புளோக் 530-லும், மற்றொன்று பெண்டமியர் சாலையின் புளோக் 47-லும் உள்ளன. வியாழக்கிழமை நடந்த விசாரணை சிராங்கூன் நார்த் வீடு தொடர்பிலானது.

அந்த வீட்டின் உரிமையாளரான சிறை அதிகாரி டெனிஸ் கொச்சுக்குட்டி, $2,600 மாத வாடகைக்கு குவோவிடம் வீட்டை வாடகைக்கு விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். குவோ 2017 முதல் 2021 வரை நான்கு ஓராண்டுகால வாடகை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தார்.

குவோவுக்கு வாடகை கொடுத்து உள்வாடகைக்குத் தங்கியிருந்தவர்களில் ஒருவரான திரு பெங் ‌ஷெங் குவோ, அந்த வீட்டில் ஓர் அறையை மூவருடன் பகிர்ந்து கொண்டதாகவும் குவோ அந்த வீட்டில் தங்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!