மருத்துவர் ஒருவர் பெண்ணை மானபங்கம் செய்ததாக நம்பப்படுகிறது. இவ்வாண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதியன்று அதிகாலை மூன்று மணியளவில் மரினா பே சேண்ட்சில் உள்ள அவென்யூ லவுஞ் கேளிக்கை கூடத்தில் அச்சம்பவம் நிகழ்ந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மானபங்கக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அறுவரில் 35 வயது தீரஜ் பிரேம் கியத்தானி என்ற 35 வயது மருத்துவரும் ஒருவர். ஸ்டார்க் மெடிக்கல் இனோவேஷன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் அவர் இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறார்.
அவரின் வழக்கு அக்டோபர் மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குவாஹே வூ அண்ட் பால்மர் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த சுனில் சுதீசன், டயானா கியாம், ஜாய்ஸ் கூ ஆகிய வழக்கறிஞர்கள் தீரஜைப் பிரதிநிதிக்கின்றனர்.
22 வயது பட் முகம்மது அப்துல்லா, 29 வயது ஹர்திரன் சிங் ரந்தாவா, 31 வயது மெல்விந்தர் சிங் குர்மித் சிங், 49 வயது வயது வாங் ஷிட்டாவ், 58 வயது ஸ்பென்சர் டான் பெங் சுவா ஆகியோர் மானபங்கக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட இதர ஐவர். வாங் சீனாவைச் சேர்ந்த ஆடவர், பட் ஒரு பாகிஸ்தானியர்.
குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற நால்வரும் சிங்கப்பூரர்கள்.