‘சமூக மாற்றம் கொண்டுவருவது நீதிமன்றங்களின் பொறுப்பு அல்ல’

‘சமூக மாற்றம் கொண்டுவருவது நீதிமன்றங்களின் பொறுப்பு அல்ல’

1 mins read
bb108bd1-f8ce-4520-a214-bc820721e245
கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன். - படம்: சிங்கப்பூர் நீதிமன்றங்கள்

நீதிமன்றங்கள் சர்ச்சைக்குரிய சமூக விவகாரங்களில் ஒரு நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து சமூகத்தில் மாற்றம் கொண்டுவருவதில் முக்கியப் பங்கு வகிக்கவேண்டும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதில் முன்னணி வகிப்பது நீதிமன்றங்களின் வேலை அல்ல என்று சிங்கப்பூரின் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் வியாழக்கிழமையன்று கூறினார்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சட்டத்துறை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திரு மேனன் இவ்வாறு பேசினார்.

நீதிமன்றங்களின் பொறுப்பைப் பற்றித் தனது முதன்மை உரையில் குற்றவியல் சட்டப் பிரிவு 377ஏ தொடர்பிலான சவால்களைப் பற்றி திரு மேனன் பேசினார். காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்து நடப்பில் இருந்த அந்தச் சட்டத்தின்கீழ் ஆண்களுக்கிடையே பாலியல் உறவு வைத்துக்கொள்வது சட்டவிரோதச் செயலாகும்.

தீவிர விவாதத்துக்குப் பிறகு 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அச்சட்டம் மீட்டுக்கொள்ளப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை அடிப்படை ஏதுமின்றி உரிமைகளை உருவாக்க சிங்கப்பூர் மறுப்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த விவகாரம் அமைந்ததென அவர் சொன்னார்.

“சட்டத்தை விளக்கி ஒவ்வொரு வழக்கின் தகவல்களுக்கு ஏற்றவாறு அதற்கு சட்டத்தைச் செயல்படுத்துவதே நீதிமன்றங்களின் வேலை. சமூகத்தில் சில தரப்பினர் அல்லது ஆர்வத்தை மையமாகக் கொண்டு இயங்கும் சில குழுக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப செயல்படுவதோ நீதிபதிகளின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்றவாறு இயங்குவதோ நீதிமன்றங்களின் வேலை அல்ல,” என்று திரு மேனன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்