சிங்கப்பூர் காவல்துறையின் மூத்த அதிகாரி முகம்மது முகம்மது ஜலீல், 54, நம்பிக்கைத் துரோக வழக்கு ஒன்றை விசாரிக்க நேரிட்டது.
பாதிக்கப்பட்டவரிடம் ஏமாற்றிப் பெற்ற தொகையைத் திருப்பித்தரும்படி சந்தேக நபரைக் கேட்ட அவர், அத்தொகையைத் தனது சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்தினார்.
2013 முதல் 2017ஆம் ஆண்டு வரை இவ்வழக்கை விசாரித்த முகம்மது முகம்மது ஜலீல், சந்தேக நபர், அவருடைய கணவர் இருவரிடமிருந்தும் மொத்தம் $43,000ஐப் பெற்றுக்கொண்டார்.
ஜூலை 2020ல் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். பொதுச் சேவை ஊழியர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பில் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை முகம்மது ஒப்புக்கொண்டார்.
வெள்ளிக்கிழமை அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கும்போது மேலும் ஒரு குற்றச்சாட்டு கருத்தில்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.