தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆட்குறைப்புக்கு மத்தியில் நிறுவனத்தை சீரமைக்கும் ஃபுட்பாண்டா

1 mins read
875f8242-83a6-4c30-bab4-427ddbba2faf
ஃபுண்பாண்டா, அதன் ஆசிய பசிபிக் வட்டார நிறுவனத்தின் ஒரு பகுதியை விற்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உணவு விநியோகிக்கும் ‘ஃபுட்பாண்டா ஆசிய பசிபிக்’ நிறுவனத்தின் ஒரு பகுதி விற்கப்படுவது குறித்த பேச்சுகளுக்கு இடையே ஆட்குறைப்புகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் நிறுவனத்தை விரைவில் சீரமைக்க வேண்டியிருக்கிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரியான ஜேக்கப் செபாஸ்டியன் ஏஞ்சல் தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் நாள்களில் நிறுவனத்தின் செயல்பாடுகளை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

இத்தகைய முடிவுகள் அனைவரையும் பாதிக்கும் எனத் தெரியும். இந்த நிலை ஏற்பட்டதற்காக வருந்துகிறேன் என்று தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதம் 20ஆம் தேதி பெர்லினைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஃபுட்பாண்டாவின் தாய் நிறுவனமான ‘டெலிவரி ஹீரோ’ அதன் ஆசிய பசிபிக் நிறுவனத்தின் ஒரு பகுதி விற்கப்படுவதற்கான பேச்சு நடைபெற்று வருவதை உறுதி செய்தது.

தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் தனது ஃபுட்பாண்டா வர்த்தகத்தை விற்க அது திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்