லிட்டில் இந்தியாவில் செப்டம்பர் 30ல் தீபாவளி ஒளியூட்டு

இவ்வாண்டின் தீபாவளிப் பண்டிகைக்கான ஏற்பாடுகள் லிட்டில் இந்தியாவில் முழுவீச்சுடன் நடைபெற்று வருகின்றன. ‘ராதா - கிருஷ்ணா’ எனும் கருப்பொருளுடன் இவ்வாண்டின் தீபாவளி ஒளியூட்டு செப்டம்பர் 30ஆம் தேதி பெர்ச் சாலையின் திறந்தவெளியில் நடைபெறும்.

அன்று இரவு 7.30 மணியளவில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தீபாவளி ஒளியூட்டை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைப்பார்.

இதனையொட்டி, மொத்தம் 45 ஒளிச்சட்டங்கள் சிராங்கூன் ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு உள்ளிட்ட சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒளியூட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை இடம்பெறும். ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு முடுக்கிவிடப்படும் இந்த ஒளிச்சட்டங்கள், வார நாள்களில் நள்ளிரவு 12 மணி வரையிலும் வார இறுதிநாள்களில் நள்ளிரவு 1 மணி வரையிலும் ஒளி வீசும். 

மேலும் நான்கு வெள்ளை குதிரைகளுடனான தங்க ரதம் வடிவமைப்பு பெர்ச் சாலையில் பொதுமக்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. 

பிரம்மாண்டமான தீபாவளிச் சந்தை, ஆடல், பாடல் உள்ளிட்ட மேடை நிகழ்வுகள், வெளிநாட்டு ஊழியர்களுக்கான சிறப்புப் போட்டிகள், கோலமிடுதல், பூக்கட்டுதல் ஆகிவற்றுக்கான பயிலரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை பொதுமக்கள் இவ்வாண்டு எதிர்பார்க்கலாம்.

இவற்றுடன் புதையல் வேட்டை, பொதுப் போக்குவரத்து இடங்களில் தீபாவளி வண்ண சுவரொட்டிகள், ‘பிக் பஸ்’ சுற்றுலாக்கள், ஆடை அலங்கார நிகழ்ச்சி ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இவ்வாண்டின் தீபாவளிக் கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்து திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவல்களை ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டது.  

புதிய முயற்சியாக இவ்வாண்டு ‘தேக்கா ராஜா’ எனும் யானை உருவிலான ஆளுயர பொம்மை அக்டோபர் 14, 28, நவம்பர் 4, 11 ஆகிய தேதிகளில் சிராங்கூன் சாலையில் வலம்வர உள்ளது. முதல் முறையாக லிஷா உருவாக்கியுள்ள இந்த உருவ பொம்மை ‘தடைகளை அகற்றுதல்’ எனும் கருப்பொருளைப் பிரதிபலிக்கும் என்று லிஷா செயலவைக் குழு தெரிவித்தது.   

மேலும் இவ்வாண்டு புதிதாக ‘தீபாவளி உணவுச் சந்தை’ ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 25ஆம் தேதி முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை கிளைவ் சாலையில் உள்ள போலியில் இந்தச் சந்தை இடம்பெறும்.

பண்டிகை உணர்வைத் தூண்டும் பல்வேறு உணவு வகைகள் இந்தச் சந்தையில் விற்பனைக்கு உள்ளன என்றும் பொதுமக்கள் உணவினை வாங்கி அங்கேயே உண்டு மகிழும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் லிஷா செயலவை தெரிவித்தது. 

“பொதுமக்களைக் கவரும் புதிய முயற்சிகளை இவ்வாண்டு ஏற்பாடு செய்துள்ளோம். ஏறத்தாழ ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இவ்வாண்டின் கொண்டாட்ட காலத்தில் பங்குகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று கூறினார் லிஷாவின் தலைவர் ரகுநாத் சிவா. 

இவ்வாண்டின் தீபாவளிக் கொண்டாட்டங்கள் குறித்த கூடுதல் தகவல்களை www.deepavali.sg இணையத்தள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாண்டு நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!