தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒவ்வாப்பொருளால் திரும்பப் பெறப்படும் நூடல்ஸ்

1 mins read
86cb397b-0f31-45b9-b307-36b9b8ae42c2
டேஸ்ட் ஒரிஜினல் ஆர்கனிக் மீ சுவா நூடல்சைத் திரும்பப் பெறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. - படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு

மலேசியாவில் தயாரிக்கப்படும் டேஸ்ட் ஒரிஜினல் ஆர்கனிக் மீ சுவா (300 கிராம்) நூடல்ஸில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய கோதுமைப்புரதம் (Gluten) இருப்பது வெளியிடப்படாத காரணத்தால், அதனைத் திரும்பப் பெறுமாறு சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

திரும்பப் பெறப்படும் நூடல்ஸின் காலாவதி தேதி 2024 ஆகஸ்ட் 29. அதனை இறக்குமதி செய்த டேஸ்ட் ஒரிஜினல் நிறுவனம், நூடல்ஸை திரும்பப்பெறும் பணியை மேற்கொண்டிருப்பதாக உணவு அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்தது.

ஒவ்வாமை உள்ளவர்களுக்கு கோதுமைப்புரதத்தால் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.

சிங்கப்பூர் சட்டப்படி, உணவுப் பொட்டலங்களின் முத்திரைகளில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய அனைத்து பொருள்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். உணவு ஒவ்வாமைகள் உள்ளவர்களைப் பாதுகாப்பது இதன் நோக்கம்.

ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த நூடல்ஸை வாங்கியிருந்தால், அதைச் சாப்பிடவேண்டாமென்று உணவு அமைப்பு ஆலோசனை கூறுகிறது. ஏற்கெனவே சாப்பிட்டவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வது நல்லது.

குறிப்புச் சொற்கள்