அங்கீகாரம் ரத்து

அங்கீகாரம் ரத்து

1 mins read
64d52482-20ba-467d-9e59-e5208f4043de
பொதுப் பயனீட்டுக் கழகத்தின் அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதற்கான காலநேர கட்டுப்பாட்டை மீறியதற்காக மதர்ஷிப் என்ற உள்ளூர் ஊடகத்தின் செய்தித்துறை அங்கீகாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.  - படம்: மதர்ஷிப்.காம் 

மதர்ஷிப் என்ற உள்ளூர் ஊடகத்தின் செய்தித்துறை அங்கீகாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தேசிய தண்ணீர் விநியோக அமைப்பான பொதுப் பயனீட்டுக் கழகத்தின் அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதற்கான காலநேர கட்டுப்பாட்டை மீறியதற்காக அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தண்ணீர் கட்டணம் தொடர்பாக அந்த ஊடகம் தன்னுடைய இணையத்தளத்திலும் ஃபேஸ்புக் பக்கத்திலும் செவ்வாய்க்கிழமை ஒரு செய்தியை வெளியிட்டது.

ஆனால், அந்தச் செய்தியை புதன்கிழமை பிற்பகல் 5 மணிக்குத்தான் வெளியிட வேண்டும் என்ற நேர கட்டுப்பாடு இருந்தது என்று தொடர்பு தகவல் அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

மேல் முறையீடு செய்வதற்கு அக்டோபர் 11 வரை மதர்ஷிப்புக்கு காலஅவகாசம் இருக்கிறது என்றும் அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்