தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரலாற்றுப் படங்களைச் சித்திரிக்கும் புதிய அஞ்சல்தலைகள் வெளியீடு

1 mins read
4ea3279e-6835-4d30-ab99-7a51e38afe42
நான்கு அஞ்சல்தலைகள் அடங்கிய தொகுப்பு $4.35க்கு விற்கப்படுகிறது. - படம்: தேசிய நூலக வாரியம்

சிங்கப்பூர் ஆற்றின் வரலாற்றையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் புதிய அஞ்சல்தலை தொகுப்பை சிங்போஸ்ட் நிறுவனமும் தேசிய நூலக வாரியமும் வெள்ளிக்கிழமை வெளியிட்டன.

$0.80, $0.90, $1.15, $1.50 விலைமதிப்புடைய அந்த அஞ்சல்தலைகளில், 19ஆம் நூற்றாண்டில் சிங்கப்பூர் ஆற்றின் படங்கள் இடம்பெறுகின்றன. தேசிய நூலகத்தின் அரியவகை பொருள் தொகுப்பிலிருந்து அந்தப் படங்கள் பெறப்பட்டன.

சிங்கப்பூரின் கூடுதலான கதைகளைப் பொதுமக்களிடம் கொண்டுசேர்க்க, பங்காளித்துவ அமைப்புகளுடன் சேர்ந்து தொடர்ந்து நடத்தப்படும் கூட்டு முயற்சியை அஞ்சல்தலைகள் பிரதிநிதிப்பதாக வாரியம் கூறியது.

நான்கு அஞ்சல்தலைகள் அடங்கிய தொகுப்பு $4.35க்கு விற்கப்படுகிறது. சிங்போஸ்ட் கிளைகளில் அல்லது சிங்போஸ்ட்டின் இணையத் தளத்தில் அஞ்சல்தலைகளை வாங்கலாம்.

குறிப்புச் சொற்கள்