தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடுத்த ஈராண்டுகளின் தேசிய தின அணிவகுப்பு பாடாங்கில் நடைபெறும்

1 mins read
a74e8467-983f-4d83-9e38-519d9fad866c
அடுத்த ஈராண்டுகளுக்கான தேசிய தின அணிவகுப்பு செயற்குழுக்கள், பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் மதிப்பீட்டை நிறைவு செய்துள்ளன. 2024, 2025ஆம் ஆண்டுகளின் தேசிய தின அணிவகுப்பு பாடாங் திடலில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அடுத்த ஈராண்டுகளின் (2024, 2025) தேசிய தின அணிவகுப்பு பாடாங்கில் நடைபெறும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (செப். 29) அந்த அறிவிப்பு வெளியானது.

இரு அணிவகுப்புகளிலும் நாட்டின் முக்கிய மைல்கற்களைக் கொண்டாடும் அம்சங்கள் இடம்பெறும்.

அடுத்த ஆண்டுடன் சிங்கப்பூர் அதன் தேசியத் தற்காப்புக் கொள்கையான முழுமைத் தற்காப்பைப் பின்பற்றத் தொடங்கி 40ஆம் ஆண்டுகள் நிறைவடையும்.

அதற்கு அடுத்த ஆண்டு, நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடையும்.

பாடாங்கின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு அதைத் தேர்ந்தெடுத்ததாக 2025ஆம் ஆண்டு தேசிய தின அணிவகுப்பு செயற்குழு கூறியது.

1966ஆம் ஆண்டு சிங்கப்பூரின் முதல் தேசிய தின அணிவகுப்பு பாடாங்கில்தான் நடைபெற்றது.

2015ல் நாட்டின் 50வது தேசிய தின அணிவகுப்பும், சிங்கப்பூரின் 200ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் அனுசரிக்கப்பட்ட 2019ஆம் ஆண்டிலும் பாடாங்கில்தான் தேசிய தின அணிவகுப்புகள் இடம்பெற்றன.

குறிப்புச் சொற்கள்