சிங்கப்பூரில் இவ்வாண்டின் கடைசி பெருநிலவைக் (சூப்பர்மூன்) காண வெள்ளிக்கிழமையன்று மக்களுக்கு வாய்ப்பு கிட்டியது. மக்கள் நிலவைக் காண்பதற்கென்றே மேகங்கள் வழிவிட்டு சேவை செய்தன.
இதற்காகவே சிலர் நேரம் ஒதுக்கிக்கொண்டு கேமராக்களைத் தயார்நிலையில் வைத்திருந்தனர். வானிலை அவர்களை ஏமாற்றவில்லை.
இரவு சுமார் 8.10 மணிக்கு பிடோக் போன்ற வட்டாரங்களில் சிலர் பெருநிலவைக் கண்டு களித்துப் படமெடுத்தனர்.
மேகங்கள் ஒத்துழைக்காதோ என்ற கவலை இருந்தது. ஆனால் இறுதியில் சுபமாக அமைந்தது.
முழுநிலவு உலகுக்கு ஆக அருகே இருந்தபடி வலம் வந்தால் அது பெருநிலவு என்றழைக்கப்படும். இனி இவ்வாண்டு இந்த நிகழ்வு இடம்பெறாது.