சிங்கப்பூரில் விலங்குக் கொடுமை 11 ஆண்டு காணாத அளவுக்கு மோசமடைந்து உள்ளதாக எஸ்பிசிஏ எனப்படும் விலங்கு துன்புறுத்தல் தடுப்புச் சங்கம் தெரிவித்து உள்ளது.
2022 ஜூலைக்கும் 2023 ஜூனுக்கும் இடைப்பட்ட காலத்தில் விலங்குகள் துன்புறுத்தப்பட்ட 862 சம்பவங்கள் மீது விசாரணை நடத்தப்பட்டதாக அது குறிப்பிட்டு உள்ளது.
இதற்கு முன்னர், 2011 ஜூலைக்கும் 2012 ஜூனுக்கும் இடைப்பட்ட காலத்தில் 1,017 விலங்கு துன்புறுத்தல் சம்பவங்கள் நிகழ்ந்ததே இதுவரை உச்சமாக நீடிக்கிறது.
கடந்த ஜூலை மாதத்திற்கும் இந்த செப்டம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் 196 சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்த விவரங்களை எஸ்பிசிஏ, சனிக்கிழமை இரவு நடைபெற்ற வருடாந்திர நிதி திரட்டு நிகழ்வில் தெரிவித்தது.
2023 ஜூனுடன் முடிவடைந்த ஆண்டில், 4,737 விலங்குகள் துன்பத்தில் சிக்கி இருந்தது தெரிய வந்ததாகவும் சங்கம் குறிப்பிட்டது.


