ஈசூன் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடத்தின் தரைத்தளத்துக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாஸ்டா பியேன்டே கார் தீப்பிடித்து எரிந்தது.
இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாலை நிகழ்ந்தது.
சம்பவம் நிகழ்ந்தபோது காரில் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த கார் கொழுந்துவிட்டு எரியும் காட்சி காணொளி எடுக்கப்பட்ட எஸ்ஜி ரோட் விஜலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
கார் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தபோது அவற்றின் கதவுகளில் ஒன்று திறந்திருந்தது.
தீயை அணைக்க புளோக் 455 ஈசூன் ஸ்திரீட் 41க்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் விரைந்தனர்.
தீயை அணைத்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் கார் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.