சிங்கப்பூரில் கரிம வரி இப்போது ஒரு டன்னுக்கு $5 ஆக உள்ளது. அது, 2024ஆம் ஆண்டு முதல் ஒரு டன்னுக்கு $25 ஆக அதிகரிக்கப்படும்.
பிறகு 2026 முதல் 2027 வரை டன்னுக்கு $45 ஆகவும் அது கூடும்.
கரிம வரியை 2030வது ஆண்டுவாக்கில் $80 ஆக உயர்த்துவது இலக்கு.
இந்நிலையில், நிறுவனங்கள் தங்களுக்கான வரியை ஈடுசெய்யப் பயன்படுத்தக்கூடிய கரிம அனுமதி அளவுகள் உயர்தரத்துடன் இருப்பதை உறுதிசெய்வதற்கான தகுதி நிபந்தனைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
நிறுவனங்கள், அனைத்துலக கரிம அனுமதி அளவைப் பயன்படுத்தி தங்களுடைய வரி விதிக்கத்தக்க கரிமக் கழிவு அளவில் 5% வரைதான் ஈடு செய்யலாம்.
சிங்கப்பூரில் ஆண்டு ஒன்றுக்கு 25,000 டன் அல்லது அதற்கும் அதிக கரிமக் கழிவு வாயுவை வெளியிடும் நிறுவனங்கள் அனைத்திற்கும் வரி விதிக்கப்படும்.
அந்த வரியை ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் கரிமக் கழிவு அனுமதி அளவு, உயர்ந்த சுற்றுச்சூழல் நேர்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் ஏழு கோட்பாடுகளை உருவாக்கி இருக்கிறது. அவற்றை ஒவ்வொரு திட்டமும் மீறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
மரினா பே சேண்ட்சில் புதன்கிழமை எரிசக்தி சிக்கன தேசிய பங்காளித்துவ விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்புடைய செய்திகள்
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ ஒலிப்பதிவு செய்யப்பட்ட செய்தி மூலம் அந்த நிகழ்ச்சியில் இதனை அறிவித்தார்.
தகுதி நிபந்தனைகள், இந்தத் தொழில்துறையைச் சேர்ந்த தரப்புகளையும் அரசாங்கம் சாராத தரப்புகளையும் கலந்து ஆலோசித்து உருவாக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.

