தங்குவிடுதிகளில் ஓர் அறையில் அதிகபட்சம் 12 பேர் வசிக்கலாம்

சிங்கப்பூரில் 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 1,000 வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள் புதிய இடைக்கால விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும்.

வருங்காலத்தில் தங்குவிடுதிகளில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும், 2021ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தங்குவிடுதிகளுக்கான விதிமுறைகளுடன் ஒப்பிடுகையில் இடைக்கால விதிமுறைகள் அவ்வளவு கடுமையானவை அல்ல.

சம்பந்தப்பட்ட 1,000 தங்குவிடுதிகள், 2040ஆம் ஆண்டுக்குள், 2021ல் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது. கூடுதல் கடுமையாக விதிமுறைகள் தற்போதைக்குப் புதிதாகக் கட்டப்படும் தங்குவிடுதிகளுக்கு மட்டும் பொருந்தும்.

இந்த 1,000 தங்குவிடுகளில் சில வெளிநாட்டு ஊழியர்களுக்கென கட்டப்பட்டவை. மற்றவை தங்குவிடுதிகளாக மாற்றியமைக்கப்பட்ட தொழில்துறைக் கட்டட, கிடங்குப் பகுதிகள்.

இந்த 1,000 தங்குவிடுதிகளில் கிட்டத்தட்ட 235,000 படுக்கைகள் உள்ளன.

2027ஆம் ஆண்டிலிருந்து 2030ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த தங்குவிடுதிகள் கட்டங்கட்டமாக இடைக்கால விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும். சில பெரிய தங்குவிடுதிகள் முன்னதாகவே இடைக்கால விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும். அவற்றில் பொதுச் சுகாதார அபாயம் அதிகம் இருப்பது இதற்குக் காரணம்.

2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின்படி தங்குவிடுதிகளில் ஓர் அறையில் 12 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது, படுக்கைகளுக்கு இடையே குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும். அவற்றோடு, தங்குவிடுதிகளில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 4.2 சதுர மீட்டர் இடம் இருக்கவேண்டும், ஒவ்வோர் ஆறு தங்குவிடுதி வாசிகளுக்கும் ஒரு கழிவறை இருக்கவேண்டும்.

புதன்கிழமையன்று அறிவிக்கப்பட்ட இடைக்கால விதிமுறைகளின்கீழ், தங்குவிடுதிகளில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 3.6 சதுர மீட்டர் இடம் இருக்கவேண்டும். இது, ஊழியர்களுக்கான தங்கும் வசதி தொடர்பான அனைத்துலக ஊழியரணி அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்ப வரையப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. இடைக்கால விதிமுறைகளின்படி படுக்கைகளுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளி இருப்பது நல்லது எனப் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், உள்கட்டமைப்பு சவால்களை எதிர்நோக்கும் தங்குவிடுதிகளில் தனிப்பட்ட கழிவறைகளுக்குப் பதிலாக பலர் பயன்படுத்தும் கழிவறைகள் இருக்கலாம். தனிப்பட்ட சூழல்களைக் கருத்தில்கொண்டு அதற்கு அனுமதி வழங்குவது குறித்து மனிதவள அமைச்சு ஆலோசிக்கும்.

2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின்படி எல்லா அறைகளிலும் கம்பியில்லா இணையச் சேவை வழங்கப்படவேண்டும். இத்தகைய நிபந்தனைகள், இடைக்கால விதிமுறைகளில் இராது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!